Hajj pilgrims death : இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது செளதி அரேபியாவில் ஏற்பட்ட கடுமையான வெப்பத்திற்கு இதுவரை 1180 பேர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருகிறது. இதில், 98 இந்தியர்கள் இறந்துவிட்டதை இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) இன்று (2024 ஜூன் 21 வெள்ளிக்கிழமை) உறுதிப்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹஜ் யாத்திரையில் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள் தொடர்பாக வெளியுறவு அமைச்சக  செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்  செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.



கடந்த ஆண்டு வருடாந்திர யாத்திரையின் போது 187 பேர் இறந்துள்ளதாகவும் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், "இந்த ஆண்டு, 1,75000 இந்திய யாத்ரீகர்கள் மக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்கொண்டனர். மே 9 முதல் ஜூலை 22 வரை இந்தியர்கள் மேற்கொண்ட யாத்திரையில் இதுவரை, 98 இறப்புகள் பதிவாகியுள்ளன" என்று அவர் கூறினார்.


"இயற்கையான காரணங்கள், நாட்பட்ட நோய்கள் மற்றும் முதுமை காரணமாக மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அராபத்தின் நாளில் ஆறு பேர் இறந்தனர் மற்றும் நான்கு பேர் விபத்து தொடர்பான மரணங்களில் உயிரிழந்தனர்" என்று ஜெய்ஸ்வால் ஊடக சந்திப்பில் கூறினார்.


பகல் வெப்பநிலை 50 டிகிரிக்கு மேல் உயரும் நிலையில், பலி எண்ணிக்கை 1,000ஐத் தாண்டிவிட்டது. சவூதி அரேபியாவின் மெக்காவில் வருடாந்திர புனித யாத்திரையின் போது இறந்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 1,000 ஐத் தாண்டியுள்ளது என்று AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


பதிவான இறப்புகளில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பதிவுசெய்யப்படாத யாத்ரீகர்கள் என்றும், அவர்கள் புனித நகரமான மெக்காவில் சடங்குகளைச் செய்யும்போது கடுமையான வெப்பத்தை தாங்க முடியாமல் இறந்ததாக தெரிகிறது.  


மேலும் படிக்க | சொந்த வீடு இல்லாவிட்டாலும், இருந்த இடத்தில் இருந்து பாடாய் படுத்தும் ராகு! விமோசனம் இருக்கே!


நேற்று (2024 ஜூன் 20 வியாழன் ) அன்று அறிவிக்கப்பட்ட இறப்பு தொடர்பான தரவுகளில் எகிப்தில் இருந்து 58 பேர் இடம் பெற்றிருந்தனர். தீவிர வெப்பத்தின் காரணமாக உயிரிழந்த 658 எகிப்தியர்களில், 630 பேர் பதிவு செய்யப்படாத யாத்ரீகர்கள் என்றும் தெரியவந்துள்ளது.


ஆண்டுதோறும், உலகம் முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட 1.8 மில்லியன் மக்கள் ஹஜ் யாத்திரையில் பங்கேற்க மக்காவிற்கு வருகிறார்கள். இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள விரும்பும் இஸ்லாமியர்கள், தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது மக்காவிற்குச் செல்வது வழக்கம்.


மெக்கா நகரத்தில் ஒவ்வொரு தசாப்தத்திலும் வெப்பநிலை 0.4 டிகிரி உயர்ந்துள்ளது, இது யாத்ரீகர்களுக்கு மேலும் சங்கடங்களைக் கொடுப்பதாக, சவூதி அரேபிய அதிகாரிகள் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூன் 19 ஆம் தேதி வரை தொடரும் ஹஜ் யாத்திரையின் விதிமுறைகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ