Amazon Layoffs: அமெரிக்காவின் சிலிக்கான் வேளியில் தற்போது பணிநீக்க படலம் மும்முரமாக நடந்து வருகிறது. நிதி பிரச்சனை, செலவுகள் தொடர்பான பல்வேறு காரணங்களை கூறி, தொழில்நுட்பம் நிறுவனங்கள் \பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துவருகின்றன. ஆட்குறைப்பு நடவடிக்கைகள்தனியார் துறையில் புதிதில்லை என்றாலும், மிகவும் பிரபலமான நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு இது மனரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதை உறுதிப்படுத்துகிரது அமேசான் நிறுவனத்தின் 2வது சுற்று பணிநீக்கங்கள். நிறுவனத்தின் வருடாந்திர திட்டமிடல் செயல்முறையின் இரண்டாம் கட்டம் இம்மாதம் நிறைவடைந்ததாகவும், கூடுதல் பணியாளர்கள் நீக்கப்பட இருப்பதாகவும் நிறுவனத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.



அடுத்த சில வாரங்களில் மேலும் 9,000 வேலைகளை அகற்ற அமேசான் திட்டமிட்டுள்ளது என்று தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி திங்களன்று ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு குறிப்பில் தெரிவித்தார்.


இந்த வேலை வெட்டுக்கள் நிறுவனத்தின் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய பணிநீக்கம் ஆகும், 18,000 ஊழியர்களை நிறுவனம் பணிநீக்கம் செய்வதாக ஜனவரியில் அமேசான் கூறியது.


ஆனால், அமேசான் இன்னும் சில மூலோபாய பகுதிகளில் புதிய பணியாளர்களை அமர்த்த இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.  


மேலும் படிக்க | எலோன் மஸ்கின் அதிரடி நடவடிக்கை! 200 ஊழியர்களை தட்டித்தூக்கிய டிவிட்டர்! வேலை காலி


கடந்த சில காலங்களாக அமேசான் நிறுவனத்தின் வருவாயில் பெரிதாக லாபமில்லை எனக் கூறப்பட்ட நிலையில், அதன் செலவுகளை குறைக்க இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை நிறுவனம் கையில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மொத்தம் 18 ஆயிரம் பணியாளர்களை நீக்கும் நடவடிக்கையில் இந்த மாதம் ஒன்பதாயிரம் பேர் நீக்கப்படுகின்ரானர். இதுதான், அமேசான் மேற்கொண்ட ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் அதிகபட்ச எண்ணிக்கை கொண்டதாக இருக்கும் என நம்பப்படுகிறது. 


அமேசான் நிறுவனத்தில் உலகம் முழுக்க  சுமார் 16 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகக்து. தற்போதைய ஆட்குறைப்பு நடவடிக்கையில், பெரும்பாலானவர்கள்,அலெக்ஸா வாய்ஸ் அஸிஸ்டென்ட் தொடர்பாக பணிபுரிபவர்கள், சில்லறை விற்பனை பிரிவை சார்ந்தவர்கள், மனிதவள பணியாளர்கள் ஆகியோர் அடங்குவார்கள். 


மேலும் படிக்க | முக்கிய அறிவிப்பு! இனி இந்த தொகைக்கு மேல் பணமாக பரிவர்த்தனை செய்ய முடியாது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ