பிரிட்டனின் ஓரின சேர்க்கை ‘தந்தையர்களுக்கு’ வாடகை தாய் மூலம் குழந்தை!
பாரி ட்ரெவிட் பார்லோ மற்றும் ஸ்காட் ஹட்சின்சன் என்ற ஓரின சேர்க்கை ஜோடி, பிரிட்டனின் முதல் ஓரின சேர்க்கை தந்தைகளாக அங்கீகரிக்கப்பட்டனர்.
பிரிட்டனில், கடந்த 1999 ஆம் ஆண்டில், பாரி மற்றும் டோனி மிகவும் பிரபலமடைந்தனர். பிரித்தானியாவில் தாய் இல்லாமல் தந்தை இருவர் என்ற அந்தஸ்தைப் பெறும் முதல் ஓரினச்சேர்க்கை ஜோடி இதுவாகும். பாரி ட்ரெவிட் பார்லோ மற்றும் ஸ்காட் ஹட்சின்சன் என்ற ஓரின சேர்க்கை ஜோடி, பிரிட்டனின் முதல் ஓரின சேர்க்கை தந்தைகளாக அங்கீகரிக்கப்பட்டனர். 1999 ஆம் ஆண்டில், பாரி ட்ரெவிட் பார்லோ மற்றும் டோனி டிராவிட் பார்லோ என்பவரை மணந்தார். அவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். ஆனால் பின்னர் இருவரும் பிரிந்தனர். பாரி தனது மூத்த மகளின், காதலனான ஸ்காட் ஹட்சின்சன் என்பரை காதலிக்க தொடங்குகிறார்.
ஆறு குழந்தைகளின் தந்தையான பாரி, 2019 ஆம் ஆண்டில் டோனியிலிருந்து பிரிந்து, தனது ஓரின சேர்க்கை காதலரான ஸ்காட் ஹட்சின்சன் (வயது 25), உடன் வாழத் தொடங்கினார். இந்த ஜோடிக்கு அக்டோபர் 2020, இதே போன்று வாலண்டினா என்ற மகள் பிறந்த நிலையில், இப்போது ஆகஸ்ட் 12 அன்று வாடகைத் தாய் மூலம் ஒரு மகனைப் பெற்றனர். தனது மகனுக்கு ரோமியா என்று பெயரிட்டுள்ளார். இந்த மகனை வரவேற்ற அவர்கள், ரோமியோவிற்கு என தனது சொந்த படகு மட்டுமல்ல, எண்ணற்ற டிசைனர் ஆடைகளையும் வாங்கி குவித்திருக்கின்றனர். அவரது அலமாரியில் குஸ்ஸி, டியோர் போன்ற ஆடம்பர பிராண்டுகளின் ஆடைகள் அடிக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Viral Video: மலைப்பாம்பிடம் சிக்கிய முதலை... திக் திக் நிமிடங்கள்
பாரி மற்றும் டோனி என்ற ஓரின சேர்க்கை தம்பதியினருக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ள நிலையில், அவர்கள் பிரிந்துவிட்டனர். ஆனால் இருவரும் £157 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை கொண்டுள்ளனர். ஏழு குழந்தைகளின் தந்தையான பாரி, தனது அனைத்து குழந்தைகளுக்கும் ஆடம்பரமான வாழ்க்கையை வழங்க விரும்புவதாக கூறினார். டோனி ரோமியோவுக்கு £1 மில்லியன் பரிசு கொடுத்ததாக பாரி கூறினார். பாரி மற்றும் ஸ்காட்டுக்கு ரோமியாவுக்கு முன் வாலண்டினா என்ற மற்றொரு மகள் இருக்கிறாள். வாலண்டினாவும் ரோமியோவைப் போலவே வளர்க்கப்பட்டாள். அவருக்கும் தனி சமையல்காரர், முழு நேர பராமாரிப்பாளர்கள், வீட்டு ஊழியர்கள், முழு நேர முடி ஒப்பனையாளர் என பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாரி மற்றும் ஸ்காட் , வாலண்டினா என்னவெல்லாம் வேண்டுமோ, அதை எல்லாம் செய்கிறார்கள்.
1999 ஆம் ஆண்டில், பாரி மற்றும் டோனி பிரபலமடைந்தனர் மற்றும் பிரித்தானியாவில் தாய் இல்லாமல் தந்தை இருவர் என்ற அந்தஸ்தைப் பெறும் முதல் ஓரினச்சேர்க்கை ஜோடி இதுவாகும், மேலும் அவர்களின் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழிலும் இதுவே எழுதப்பட்டுள்ளது. 2019 இல், இந்த ஜோடி பிரிந்து மீண்டும் பிரபலமாகியது. இப்போது, மீண்டும் வாடகை தய மூலம் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளதை அடுத்து மீண்டும் பிரபலமடைந்துள்ளது.
மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் சாப்பிட்டீங்க சார்... போதையில் ‘தள்ளாடும்’ அணில்!
மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ