அடித்தது Jackpot! ஆர்டர் செய்தது ஆப்பிள் பழம்; கிடைத்ததோ APPLE iPhone
கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என ஒரு பழமொழி உண்டு. அதற்கு ஏற்றார் போல் நடத்திருக்கிறது ஒரு சுவையான சம்பவம்.
கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என ஒரு பழமொழி உண்டு. அதற்கு ஏற்றார் போல் நடத்திருக்கிறது ஒரு சுவையான சம்பவம்.
ஆப்பிள் பழம் வாங்க போன ஒருவருக்கு ஆப்பிள் ஐபோன் கிடைத்தால் எப்படி இருக்கும்.
இங்கிலாந்தில் (England), ட்விக்கன்ஹாமில் (Twickenham) உள்ள ஒரு சூப்பர் மார்கெட்டில் இருந்து மளிகைப் பொருட்களை வாங்கியவருக்கு, தனக்கு இன்று ஜாக்பாட் கிடைக்க போகிறது என தெரியாது.
மிகவும் ஆச்சரியமான ஒரு சம்பவத்தில், இங்கிலாந்தில் நிக் ஜேம்ஸ் என்ற நபர் ஆன்லைனில் ஆர்டர் செய்த சில ஆப்பிள்களுக்கு பதிலாக ஒரு புதிய ஆப்பிள் ஐபோனை (Apple iPhone) இருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சியில் திக்குமுகாடிப்போனார்.
ALSO READ | உங்கள் வீட்டு கரண்ட் பில் ஷாக் அடிக்கிறதா; இதோ உங்களுக்கான டிப்ஸ்
” நாங்கள் ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்தோம், ஆனால், ஒரு ஆப்பிள் ஐபோன் கிடைத்தது! என்ன சொல்வ்து என்றே தெரியவில்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது! ” என்று ஜேம்ஸ் டெய்லி மிரரிடம் கூறினார்.
டெஸ்கோ மொபைல் (Tesco Mobile) என்ற நிறுவனம் விளம்பர உத்தியாக “super substitute” என்ற விளம்பர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்களுக்கு ‘click and collect’ என்ற பரிசு திட்டத்தின் கீழ், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களது ஆர்டர்களுக்கு பதிலாக, வேறு விலை உயர்ந்த பொருளை பரிசாக அனுப்பி வைத்தது.
"டெஸ்கோ மொபைல் ஏப்ரல் 18 வரை மொத்தம் 80 பொருட்களை ஒரு சில கடைகளில் கொடுத்துள்ளது. வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள், மேலும் ஒரு “super substitute” , அதற்கு பதிலாக வேறொரு விலை உயர்ந்த பொருளை பெறுவதற்கான வாய்ப்பைப் பெற நீங்கள் சில பொருட்களை வாங்க வேண்டும், ” என்று இந்த பரிசு திட்டம் குறித்து அந்த நிறூவனம் விளக்கியுள்ளது.
’சூப்பர்மார்க்கெட் மற்றும் மொபைல் உலகங்கள் ஒன்றிணைந்தால் எவ்வளவு ஆச்சரியமான விஷயங்கள் நிகழக்கூடும் என்பதைக் காண்பிப்பதற்காக இந்த பரிசு திட்டம் ஏற்படுத்தப்பட்டது” என்று டெஸ்கோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்களில் சிலருக்கு ஏர்பாட்ஸ் (AirPods) மற்றும் சாம்சங் கேலக்ஸி (Samsung Galaxy) சாதனங்கள் ஆகியவற்றை பரிசாக பெற்றனர்.
ALSO READ | உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்கள்; ஒரு அலசல்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR