சீன அதிபர் Xi Jinpingகை விமர்சித்த தொழிலதிபரின் நிலை என்ன தெரியுமா?
69 வயதான தொழிலதிபர் ரென், அரசுக்கு சொந்தமான Huayuan Property என்ற நிறுவனத்தின் முன்னாள் தலைவர். Ren Zhiqiang 7.4 மில்லியன் டாலர் பொது நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு $ 620,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: சீனாவின் பிரபல தொழிலதிபர் ரென் ஷிகியாங்கிற்கு (Ren Zhiqiang)18 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் செய்தது, லஞ்சம் பெற்றது, பொது பணத்தை மோசடி செய்தது (Embezzlement of Public Funds) என பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து வரும் நிலையில், சில மாதங்களுக்கு அதிபர் ஜி ஜின்பிங் பற்றி முன்பு ரென் ஜீசியாங் கட்டுரை ஒன்றை எழுதினார். இந்த கட்டுரையில், அவர் நேரடியாக சீன அதிபரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது இலக்கு ஜின்பிங் தான். அதன் பின்னர், மார்ச் மாதத்தில் ரென் ஜீசியாங் திடீரென்று காணாமல் போனார்.
69 வயதான தொழிலதிபர் ரென், அரசுக்கு சொந்தமான ஹுவாயுவான் பிராப்பர்டி (Huayuan Property) என்ற நிறுவனத்தின் முன்னாள் தலைவர். Ren Zhiqiang 7.4 மில்லியன் டாலர் பொது நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு $ 6,20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரென் தன் மீதான 4 குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார், அதையடுத்து அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ரென் "தன்னுடைய குற்றங்கள் அனைத்தையும் தானாக முன்வந்து உண்மையாக ஒப்புக்கொண்டார்" என்று சீன அரசாங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தனது பதவியை தவறாக பயன்படுத்திய ரென் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அரசு அறிக்கைக் கூறுகிறது. .
ரென், 'கட்சி மற்றும் அரசாங்க அதிகாரிகள் தங்கள் நலன்களைப் பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள், மற்றும் பேரரசர் தங்கள் நலன்களையும் அசல் நிலையையும் பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை காட்டுகிறார் என்ற உண்மையை இந்த கொரோனா தொற்றுநோய் அம்பலப்படுத்தியுள்ளது' என்றார்.
இதற்கு முன்னதாக சீனாவில் பத்திரிகை சுதந்திரம் தேவை என்று ரென் மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டிருந்தார். இருப்பினும், அவரது Weibo கணக்கை அதிகாரிகள் மூடிவிட்டனர். 2003 முதல் 2017 வரை 132 மில்லியன் யுவான் லஞ்சம் வாங்கியதாக ரென் மீது குற்றச்சாட்டு இருப்பதை நீதிமன்றம் உறுதி செய்தது. இருப்பினும், அவருக்கு இவ்வளவு நீண்ட தண்டனை வழங்குவதற்கான காரணம் அவர் ஜி ஜின்பிங்கை விமர்சித்ததே என்று தொழிலதிபர் ரென்னின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். ரென் தனது கட்டுரையில் சீன அதிபர் கோமாளி (clown) என்று குறிப்பிட்டிருந்தார்.
ரெனுக்கு தண்டனை வழங்குவதன் மூலம், ஜி ஜின்பிங் நிர்வாகம் தனது எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக ரென்னின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். தனது கட்டுரையில் ரென், சீன அதிபரை விமர்சித்த்தை அடுத்து, அவர் மீது சந்தேகத்திற்குரிய கடுமையான ஒழுக்க மீறல் (Suspected Serious Discipline Violation) வழக்கு தொடரப்பட்டது. இப்போது அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Read Also | Google Pay இப்போது tap-to-pay அம்சத்தை ஆதரிக்கும், இதன் பயன் என்ன தெரியுமா?