மனிதர்களை தாக்கும் நோய்களில் குணப்படுத்தவே முடியாத முக்கிய நோய்களில் ஒன்றாக உள்ளது  புற்றுநோய். ரத்த புற்று, எலும்பு புற்று, நுரையீரல் புற்று, குடல், கல்லீரல் என இதில் பல்வேறு வகைகள் உள்ளன. இவை நமது உடலின் எந்த பகுதியையும் தாக்கும் அபாயம் உள்ளது. புற்றுநோய் பாதிப்பை விட அது மேலும் பரவாமல் இருக்க மெற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் மிகவும் வலி மிகுந்தவை. இதற்காக தற்போதுவரை கீமோதெரபி எனும் சிகிச்சை முறை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புற்றுநோயை குணப்படுத்தும் மருந்துகளை கண்டுபிடிக்க உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் அவை அனைத்தும் சோதனை அடிப்படையிலேயே உள்ளன. இந்த நிலையில் மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக விளங்கும் புற்றுநோயை முழுவதும் குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். 


மான்ஹாட்டன் நகரில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தில்(Memorial Sloan Kettering Cancer) நடத்தப்பட்ட பரிசோதனையில் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18  பேரின் சிகிச்சைக்காக டோஸ்டார்லிமாப் (Dostarlimab) எனும் மருந்து பயன்படுத்தப்பட்டது. 


மேலும் படிக்க | ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு


உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் ஆண்டிபயாடிக்காக இந்த மருந்து பயன்படுத்தப்பட்டது. இதனை புற்றுநோய் பாதித்த 18 பேருக்கும் தொடர்ந்து 3 வாரங்கள் என 6 மாதம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது. இறுதியில் அவர்கள் அனைவருக்கும் புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் கட்டிகள் மறைந்ததோடு முழுமையாக குணமடைந்தனர். 


வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாக ஆராய்ச்சிக் குழுவில் அங்கம் வகிக்கும் மருத்துவரான லூயிஸ்.ஏ.டயஸ் தெரிவித்துள்ளார். இந்த மருந்தை மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் பரிசோதித்து அனுமதி வழங்கும் பட்சத்தில் உலகில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கு இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதேசமயம் இந்த சோதனை முடிவுகள் நம்பகத்தன்மையுடன் இருந்தாலும் குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளை கொண்டே இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. எனவே, அடுத்த கட்டமாக இந்த மருந்தின் பயன்கள் குறித்து அதிக அளவிலானோர் மத்தியில் பரிசோதனை செய்து பார்க்க வேண்டியதும் அவசியம் என அராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 


மேலும் படிக்க | கண்ணகி முருகேசன் ஆணவ கொலை வழக்கு : மரண தண்டனை ஆயுளாக குறைப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe