தன்னைத்தானே கிண்டல் செய்துக் கொள்ளும் எலோன் மஸ்க்! ட்விட்டரின் புதிய CEO எப்படி?
Dog Leadership VS Twitter CEO: ட்விட்டரை வாங்கிய அன்றே, அதன் தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக நீக்கிய மஸ்க், தற்போது புதிய சி.இ.ஓவாக நாயை நியமித்துள்ளார் என்ற சர்ச்சைகள் உண்மையா?
உலக பில்லியனர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள எலோன் மஸ்க், கிண்டல் கேலி நையாண்ட்டி செய்வதிலும் வல்லவர் என்று சொல்லிவிடலாம் போல் இருக்கிறது. ட்விட்டரை வாங்கியதில் மட்டுமா அவர் வைரலானார்? மஸ்க் என்றாலே அதன்பிறகு அதிரடி நடவடிக்கைகள் தான் என்று புகழ் பெற்றவர் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர். தற்போது ட்விட்டருக்கும் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ட்விட்டரை வாங்கிய தினமே அதன் தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக நீக்கிய மஸ்க், கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் தானே தலைமை செயல் அதிகாரியாக தொடர வேண்டுமா என்ற கேள்வி எழுப்பி மீண்டும் சர்ச்சையானார்.
அவருக்கு பதிலளித்தவர்கள்களில் பெரும்பான்மையானவர்கள் (57 சதவீதம் பேர்) எலோன் மஸ்க் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சான்ஸே இல்ல...இவ்வளவு கம்மி விலையில iPhone 14 கிடைக்குதா?
சாதாரணமாகவே டிவிட்டரின் எலோன் மஸ்க் செய்யும் அதிரடி நடவடிக்கைகளுக்கு மத்தியில், புதிய தலைமை செயல் அதிகாரியை தேடும் பணியில் அவர் மும்முமரமாக ஈடுபட்டார். ஆனால், அங்குதான் அவர் தனது நையாண்டியை பதிவு செய்துள்ளார்.
புதிய தலைமை செயல் அதிகாரியை (CEO) அறிமுகப்படுத்திய எலோன் மஸ்கின் குறும்பு, குசும்புத்தனமாக இருக்கிறது. அவருக்கு பதில் நாய்க்குட்டியை தலைமை செயலதிகாரியாய் நியமிக்கலாம் போல!!!
எலோன் மஸ்க்கின் செல்ல பிராணியும், அவரது வளர்ப்பு நாய் தற்போது புதிய CEOவா? என அனைவரும் வாய் பிளக்கின்றனர். தனது செல்லமான பிளாக்கி என்ற வளர்ப்புப் பிராணியை ட்விட்டரின் புதிய சி.இ.ஓ. என மஸ்க் அறிமுகப்படுத்தியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அல்ல அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டரில் எலான் மஸ்க் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், சி.இ.ஓ. நாற்காலியில் பிளாக்கி அமர்ந்திருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தின் கருப்பு நிற டி-சர்ட் அணிந்திருக்கும் பிளாக்கியின் முன் இருக்கும் மேஜையில் சி.இ.ஓ. என்று எழுதியுள்ளது.
அந்த மேஜையில் சில ஆவணங்கள் பரப்பி வைக்கப்பட்டு உள்ளன. அவற்றில், பிளாக்கியின் கால் தடங்களும் உள்ளன. அதாவது, கையொப்பம் இட வேண்டிய ஆவணங்களில், புதிய தலைமை செயலதிகாரி, இப்படி கால் வைத்தால், அது கையெழுத்தாகிவிடும் என்று சொல்கிறாரா மஸ்க்?
மேலும் படிக்க | ’காதலிப்போம் காதலிக்கப்படுவோம்’ கர்பத்தை வித்தியாசமாக அறிவித்த கண்மணி சேகர் வைரல்
சரி, கையெழுத்துக்கு பதில் கால் தடம் என்றால், உத்தரவிட வேண்டுமானால் என்ன செய்வார் ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ? லொள் லொள் என குலைத்து, தனது உத்தரவை இடுவாரோ? சரி, மேஜையில் இருக்கும் லாப்டாப்பில் புதிய தலைமை செயலதிகாரி என்ன முத்திரை பதிப்பார்?
இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள எலோன் மஸ்க், ட்விட்டரின் புதிய சி.இ.ஓ.வை பார்த்து ஆச்சரியம் ஏற்படுகிறது என தெரிவித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
உண்மையில், இது ஒரு காமெடி என்று அவர் நினைத்தால், அது தவறு. பணியாளர்களை மதிப்பாரா மாட்டாரா என்ற கேள்விகளுக்கு பதிலாக பலர் இந்த பதிவை சுட்டிக்காட்ட முடியும். எலோன் மஸ்க், இனி எதிர்காலத்தில் நியமிக்கும் புதிய தலைமை செயலதிகாரிக்கு இது அவமானம் அல்லவா?
அல்லது, எனக்கு பிறகு வரும் சி.இ.ஓக்கள் எல்லாம் என் சொல்படி வாலாட்ட வேண்டும் என்று சூசகமாய் சொல்கிறாரா டிவிட்டரின் தற்போதைய சி.இ.ஓ? ட்விட்டரை வாங்கிய அன்றே, அதன் தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக நீக்கினார் மஸ்க் என்பதால், அவரது இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
எது எப்படியிருந்தாலும், இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகிறது. சிலருக்கும் முகச் சுளிப்பை ஏற்படுத்தும் இந்தப் பதிவுக்கு சிலர், நாய் வாலை நிமிர்த்த முடியுமா? என்றும் பதில் இட்டிருக்கின்றனர்.
மேலும் படிக்க | ரூ.155க்கு அசத்தல் ஆப்பரை வழங்கியுள்ள ஏர்டெல்! சிறப்பம்சங்கள் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ