எலான் மஸ்க் செய்த வைரலான சர்ச்சைக்குரிய ட்வீட்களின் பிரச்சனையில் இருந்து எலோன் மஸ்க் வெளிவந்துவிட்டார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சர்ச்சையில், டிவிட்டரின் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக, மஸ்க் மீது வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வழக்கிலிருந்து எலோன் மஸ்க் விடுவிக்கப்பட்டுள்ளார். மூன்று வாரங்கள் நடைபெற்ற விசாரணையின் முடிவில் மஸ்க் நிம்மதி தரும் தீர்ப்பைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விடுகிறார்.
ஒன்பது பேர் கொண்ட நடுவர் குழு இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டு தீர்ப்பை வழங்கியது.
இந்த வழக்கில் மஸ்க் மீது தவறு இருந்ததாக தீர்ப்பு வந்திருந்தால், எலோன் மஸ்க், பில்லியன்கணக்கான தொகையை நஷ்டஈடாக வழங்க வேண்டியிருந்திருக்கும். கடந்த அக்டோபரில் அவர் 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிய சமூக ஊடக தளமான ட்விட்டரில், நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
"டெஸ்லா 420 டேக்-பிரைவேட் வழக்கில் நிரபராதி என்று நடுவர் மன்றம் ஒருமனதாகக் கண்டறிந்ததை நான் மிகவும் பாராட்டுகிறேன்."
Thank goodness, the wisdom of the people has prevailed!
I am deeply appreciative of the jury’s unanimous finding of innocence in the Tesla 420 take-private case.
— Elon Musk (@elonmusk) February 3, 2023
டெஸ்லா ட்வீட் மீது எலோன் மஸ்க் மோசடி செய்ததாகக் கண்டறியப்படவில்லை என்பதால் டெஸ்லா இணை நிறுவனர் எலோன் மஸ்க், தற்போது சர்ச்சை மற்றும் வழக்குகலில் இருந்து நிம்மதியாக இருக்கலாம்.
மேலும் படிக்க | Video: இந்திய வீரர் அடித்த ஒரே அறை... அதிர்ந்த தினேஷ் கார்த்திக்
இதைத்தவிர, எப்போதும் வித்தியாசமாக செயலாற்றும் தொழிலதிபர் எலொன் மஸ்க், தற்போது மற்றுமொரு தொழில் முயற்சியை புகுத்த இருப்பதாக தெரிகிறது. அடுத்த கட்டமாக ட்விட்டரை பேமெண்ட் வங்கியாக மாற்ற திட்டமிட்டுள்ளராம் எலோன் மஸ்க்.
பேமெண்ட் வங்கியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அவர் எடுக்கத் தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தின் குழுவினர் அமெரிக்கா முழுவதும் ஒழுங்குமுறை பண பரிவர்த்தனை லைசென்ஸ் பெற விண்ணப்பிக்க தொடங்கியுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் கூறுகின்றன.
டிவிட்டர் மூலம் பண பரிவர்த்தனை செய்வதற்கு தேவையான மென்பொருளையும் வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஒரு சிறப்பு குழுவை எலான் மஸ்க் உருவாக்கியுள்ளாராம்! அந்தக் குழு ட்விட்டர் நிறுவனத்தை பேமெண்ட் வங்கியாக மாற்றுவதற்கு உண்டான நடவடிக்கையை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல, பெருமளவில் சொத்துக்களை இழந்தவர்கள் பட்டியலில் எலோன் மஸ்க் இடம் பெற்றுள்ளார். வரலாற்றிலலேயே மிகப்பெரிய சொத்து இழப்பை எதிர்கொண்ட முதல் நபர் என்ற பதிவை ஏற்படுத்திய எலான் மஸ்க் இதற்காக கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இணைந்ததும் டிவிட்டர் தொடர்பான சர்ச்சைகளுக்கு பிந்தைய வரலாறு ஆகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ