அலுவலகத்தில் உள்ள பயன்படுத்தப்பட்ட பொருட்களை ஏலம் விடும் டிவிட்டர் நிறுவனம்!

எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து, தொடர்ந்து கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறார். ஆனால் இவை அனைத்தையும் விட பரபரப்பான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 18, 2023, 09:51 PM IST
  • எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து, தொடர்ந்து கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறார்.
  • அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய முடிவு.
  • ட்விட்டர் அலுவலத்தில் உள்ள பயன்படுத்தப்பட்ட பொருட்களை வந்த விலையில் விற்கப்படும் நடவடிக்கை.
அலுவலகத்தில் உள்ள பயன்படுத்தப்பட்ட பொருட்களை ஏலம் விடும் டிவிட்டர் நிறுவனம்! title=

ட்விட்டர் அலுவலக விற்பனை: மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டர் நீண்ட காலமாக விவாதப் பொருளாக இருந்து வருகிறது, எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து, தொடர்ந்து கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறார். அவரது கடினமான முடிவுகள் அனைத்தும் மக்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியுள்ளன. ஆனால் இவை அனைத்தையும் விட பரபரப்பான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவல் மிகவும் ஆச்சர்யத்தை கொடுப்பதாகவும் உள்ளது. உண்மையில் நிறுவனம் தனது அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட நிறைய பொருட்களை விற்பனை செய்து வருகிறது, அதைப் பற்றிய தகவல்களைப் பெறுவதால், அவர்களும் ஆச்சரியப்படுகிறார்கள்.

அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய முடிவு

பல மாதங்களாக தலைப்புச் செய்திகளில் இருந்த பிறகு, இப்போது ட்விட்டர் அலுவலத்தில் உள்ள பயன்படுத்தப்பட்ட பொருட்களை வந்த விலையில் விற்கப்படும் நடவடிக்கை ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விலையுயர்ந்த இயந்திரங்கள் முதல் அலுவலக தளவாடங்கள் மற்றும் நிறுவனத்தில் உள்ள பயன்படுத்தப்பட்ட பல பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் நிறுவனத்தின் வருமானமாக பார்க்கப்படும்.

மேலும் படிக்க | கோதுமை மாவிற்கு அடித்துக் கொள்ளும் மக்கள்! பாகிஸ்தானின் அவல நிலையை காட்டும் வீடியோ!

கலிபோர்னியாவில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் ஜனவரி 17 முதல் ஜனவரி 18 வரை நடைபெற்ற ஏலத்தில் 600க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனையாகியுள்ளன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த பொருள் மிகவும் விலையுயர்ந்த விலையில் வாங்கப்பட்டது, ஆனால் ஏலத்தில் கேட்கப்பட்ட விலை $ 25 முதல் $ 50 வரை வைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறைந்த விலை மற்றும் விலையுயர்ந்த பொருட்களின் மதிப்பை வைத்து பார்க்கும் போது, விற்பனை விலை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் மக்கள் இந்த முடிவால் மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள்.

சமையலறையில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், மரச்சாமான்கள், நிறுவனத்தின் லோகோ என மொத்தம் 631 பொருட்கள் இதுவரை ஏலம் விடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விற்கப்படும் பொருட்கள் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன, இதனால் நிறுவனத்திற்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது பின்னர் தெரியும். ஆனால் இந்த முடிவால் அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | 50 வயதில் 60 வது குழந்தை; அடுத்த ரிலீஸுக்கு மனைவியை தேடும் நபர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News