அமெரிக்க மாகாணத்தையே திருப்பிப்போட்ட கொலைகள் பல உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க வகையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1969ஆம் ஆண்டு கணவன்-மனைவியை போட்டுத்தள்ளிய வழக்கில் தொடர்புடையவர், வேன் ஹியூட்டன். இவர், தற்போது சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சார்லஸ் மேன்சன்-சைக்கோ கொலைகாரன்: 


அமெரிக்காவின் பிரபலமான சைக்கோ கொலைகாரர்களுள் ஒருவர், சார்லஸ் மைல்ஸ் மேன்சன். இவர், காலிஃபோர்னியா மாகாணத்தில் கொலைகளை செய்வதற்கென்றெ ஒரு கூட்டத்தை உருவாக்கி அந்த கூட்டத்தை வழிநடத்தி வந்தார். மேன்சனின் ஆணைகளுக்கு அடிபணிந்து செயல்பட்ட இவரது கூட்டத்தினர், 1960களில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 9 கொலைகளை செய்துள்ளனர். அப்போது பிரபலமான ஹாலிவுட் கதாநாயகிகளுள் ஒருவராக இருந்த ஷாரோன் டேட் என்பவரது கொலையையும் இந்த கூட்டம்தான் செய்திருக்கும் என கூறப்படுகிறது. இவரது இந்த சைக்கோ கொலைகார கும்பலில் முக்கிய உறுப்பினராக இருந்த பெண் ஒருவர் தற்போது சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். 


மேலும் படிக்க | சொந்த மகளை மணந்த தந்தை... அதுவும் 4வது மனைவியாகவா? - உண்மை இதுதான்!


மேன்சனின் பின்தொடர்பாளர்: 


அமெரிக்காவில் பலரை கொடூரமாக கொலை செய்த சார்லஸ் மேன்சனின் சைக்கோ கொலைகார கும்பலில் அவரது பின்தொடர்பாளராக இருந்தவர் வேன் ஹியூட்டன். மேன்சனின் கூட்டம், வீட்டில் தங்கியிருப்பவர்களை குறிவைத்து சில நாட்கள் இடைவேளையில் இரவு நேரங்களில் கொடூரமாக கொலை செய்து வந்தது. அந்த வகையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்த லெனோ லா பியாங்கா மற்றும் ரோஸ்மேரி லா பியாங்கா என்ற கணவன் மனைவியை 1969ஆம் ஆண்டு ஆகஸ்டு 10ஆம் தேதி இரவு சார்லஸ் மேன்சனின் கூட்டம் தீர்த்துக்கட்டியது. இதில், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர், வேன் ஹியூட்டன். இந்த குற்றத்தில் ஈடுபட்டபோது இவருக்கு வயது 19. 


கொடூரமான முறையில் கொலை:


1969ஆம் ஆண்டு அந்த கொலை சம்பவம் நடந்ததற்கு பிறகு இடத்தை போலீஸார் சோதனை செய்தனர். அதில், வீட்டில் தங்கியிருந்த இருவரும் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதி தெரியவந்தது. அதில், கொலையான பெண்ணின் வயிற்றில் War என்ற வார்தை கத்தியால் எழுதப்பட்டிருந்தது. இந்த கொலை சம்பவத்திற்கு பிறகு, சைக்கோ கூட்டத்தின் முக்கிய நபராக செயல்பட்டதாக கூறி, 19 வயது வேன் ஹியூட்டன் கைது செய்யப்பட்டார். 


கொலை செய்தது எப்படி..? 


சைக்கோ கொலைகாரர்களில் வெளி நாடுகளில் நேர்காணல் எடுப்பது வழக்கம். அப்படி, 1994ஆம் ஆண்டு வேன் ஹியூட்டன் ஒரு பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி  கொடுத்திருந்தார். அதில், தான் ரோஸ்மேரி லா பியாங்காவை 16 முறை குத்தி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். 


அரை நூற்றாண்டுக்கு பிறகு விடுதலை!


வேன் ஹியூட்டன், கைது செய்யப்பட்ட உடன் மனநல காப்பகத்தில் காவல் துறையின் கண்காணிப்பில் இருந்து வந்தார். இவரது வழக்கு விசாரணை கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக நடைப்பெற்று வந்தது. இதையடுத்து, நேற்று இவர் பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இப்போது 73 வயது ஆகிறது. 


மக்கள் அதிருப்தி:


காலிஃபோர்னியா மாகாண நீதிமன்றம் வேன் ஹியூட்டனை பரோலில் விடுதலை செய்ததற்கு மக்கள் பலர் தொடர் கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அந்த மாகாணத்தின் மேயரும் தனது அதிருப்தியை ஊடகத்தினரிடம் கூறியிருந்தார். 


யார் இந்த சார்லஸ் மேன்சன்? 


தன்னை மட்டுமன்றி தன் பேச்சால் ஒரு கூட்டத்தையே சைக்கோவாக மற்றியவர், சார்லஸ் மேன்சன். இவர், ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதி பாடிவந்தார். சைக்கோ கூட்டத்தை உருவாக்க பல வருடங்களாக திட்டம் தீட்டி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை உருவாக்கியுள்ளார். இவர், எந்த கொலையும் செய்யவில்லை என்றும் பிறரை கொலை செய்ய ஆணை மட்டுமே போட்டார் என்றும் கூறப்படுகிறது. இவர், மேற்குறிப்பிட்ட இரட்டை கொலை வழக்கிற்கு பிறகு கைது செய்யப்பட்டு காவல் துறை கண்காணிப்பில் மனநல காப்பகத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2017ஆம் ஆண்டு, தனது 87ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் குறித்தும், இவரது சைக்கோ கூட்டம் குறித்தும்  Helter Skelter என்ற பிரபலமான புத்தகமும் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | ராட்சத ராட்டினத்தில் பல மணிநேரம் தலைகீழாக தொங்கிய 8 பேர்..! வைரல் வீடியோ..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ