அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் திருவிழா ஒன்று நடைப்பெற்று வந்தது. இதில், அனைவரும் விரும்பி ஏறும் ராட்சத ராட்டினம் ஒன்றும் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இதில் பயணித்த 8 பேர் அந்தரத்தில் தொங்கிய நிகழ்வு அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.
ராட்சத ராட்டினம்:
அமெரிக்க நாட்டில் உள்ல விஸ்கான்ஸின்ஸ் நகரில் உள்ல க்ராண்டன் நகரில் திருவிழா நடைப்பெற்று வந்துள்ளது. இதன் காரணமாக அங்கு Fire Ball எனும் பெயரில் பெரிய ராட்சத ராட்டினம் அமைக்கப்பட்டுள்ளது. தங்களது விடுமுறையை இந்த திருவிழாவில் கழிக்க ஏராளமானோர் குவிந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த ராட்டினத்தில் சுற்ற கூட்டம் களைக்கட்டியுள்ளது.
மேலும் படிக்க | வாடகைக்கு அப்பாக்களை எடுக்க சிறப்பு வசதி! இது நல்லா இருக்கே!
அந்தரத்தில் தொங்கிய 8 பேர்:
வட்ட வடிவில் உள்ள இந்த ராட்டினத்தி உள்ள கார்கள், சுற்றி சுற்றி மேலிருந்து கீழிறங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஜூலை 2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று இந்த ராட்டினத்தில் பலர் ஏறியுள்ளனர். சரியாக அனைத்து கார்களும் தலைகீழாக இருந்த இந்த ராட்டினம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அப்படியே நின்றுள்ளது. ராட்டினத்தில் கார்களில் இருந்த 8 பேர் அவ்வளவு அடி உயரத்தில் தலைகீழாக அப்படியே தொங்கியுள்ளனர். சீட் பெல்டில் போட்டு அனைவரும் பாதுகாப்பாக இருந்ததால், தலைகீழாக தொங்கினாலும் யாரும் கீழே விழவில்லை.
வைரல் வீடியோ:
ராட்சத ராட்டினத்தில் மூன்றரை மணிநேரமாக 8 பேர் தலைகீழாக தொங்கிய சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து இதுகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
A group of children were left hanging upside down for hours after a #RollerCoaster malfunction between rides in #America The Fireball Coaster at the Forrest County Festival in Crandon, Wisconsin, USA, suddenly stopped moving on Sunday, watch video. pic.twitter.com/EOpZcf6o6U
— NEWSBLARE (@NewsblareMedia) July 5, 2023
இந்த சம்பவத்தில் தொடர்புடையோரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பல மணிநேரத்திற்கு பிறகு மீட்பு:
ராட்டினத்தில் பழுது ஏற்பட்டதை தொடர்ந்து அதை மீண்டும் இயக்க முடியாமல் போனது. இதையடுத்து ஆபத்தை உணர்ந்து கொண்ட பொதுமக்களில் ஒருவர் காவல் துறையினருக்கும் தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். சுமார் மூன்றரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஒவ்வொருவராக காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ஒருவர் மருத்துவமனையில் அனுமதி..!
பல மணிநேரம் தலைகீழாக தொங்கியதால் காப்பாற்றப்பட்டவர்களில் சிலருக்கு தலைசுற்றல் எற்பட்டுள்ளது. அதில் ஒருவர், மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். இதுகுறித்து பேசிய காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் இப்போதைக்கு இந்த சம்பவம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகத்தான் நடைப்பெற்றது என்பதை உறுதியாக சொல்ல முடியது என்றும் தெரிவித்தார். மேலும், பொதுமக்களில் இருந்த ஒருவர் தீயணைப்பு வீரர் என்பதால் அவரும் ராட்டினத்தில் இருந்தவர்களை மீட்க உதவியதாகவும் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ