பெய்ஜிங்: கொரோனா வைரஸ் (COVID-19) இன் தோற்றத்தை அறிய உலக சுகாதார அமைப்பின் (WHO) நிபுணர்களின் குழுவை பெய்ஜிங்கிற்கு அனுப்ப சீனா புதன்கிழமை (ஜூலை 8, 2020) ஒப்புக்கொண்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விவகாரம் குறித்து "முக்கிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர், COVID-19 இன் தோற்றத்தை அறிய WHO நிபுணர்களின் குழுவை பெய்ஜிங்கிற்கு அனுப்பும் என்று சீன அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது" என்று சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் (Zhao Lijian) தெரிவித்தார்.


READ MORE | எச்சரிக்கை...! சீனாவிலிருந்து மற்றொரு புதிய கொடிய வைரஸ் பரவும் அபாயம்...


முன்னதாக ஜூலை 7 ம் தேதி அன்று ஜாவோ லிஜியன், "சீனா - ஜப்பான் - ஆர்ஓ.கே (ROK) முத்தரப்பு ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் யுனெஸ்காப் (UNESCAP) ஆகிய அமைப்புகள் மூலம் கோவிட் -19 நிபுணர்களுடன் முத்தரப்பு கூட்டம் ஜூலை 2 அன்று நடைபெற்றது என்று கூறியிருந்தார்.


3 நாடுகளின் வல்லுநர்கள் மற்றும் WHO நிபுணர்கள், சமீபத்திய நிலைமை, தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர் என்று அவர் கூறினார்.


READ MORE | கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பந்தயத்தில் சீனா முன்னிலை!!


இன்று உலக முழுவதும் கோரதண்டம் ஆடி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியது. டிசம்பர் 31, 2019 அன்று, சீனாவின் வுஹான் (Wuhan) நகராட்சி சுகாதார ஆணையத்தால், ஹூபி (Hubei) மாகாணத்தின் (சீனா) வுஹானில் "நிமோனியா நோய்களின் ஒரு கொத்து" என்று அறிவிக்கப்பட்டது.


ஜூலை 8 ம் தேதி மாலை 5 மணி நிலவரப்படி, உலகம் முழுவதும் 1,18,52,102 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுகள் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 5,44,726 பேர் கோவிட் -19 (COVID-19) நோய்க்கு பலியாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


READ MORE | கொரோனா தோற்றம் பற்றி ஆராய சீனா செல்கிறது WHO குழு


"வைரஸின் மூலத்தை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது என்றும், வைரஸ் எங்கு, எவ்வாறு தொடங்கியது என்பது உட்பட பல சம்பவங்களை பற்றி அறிந்தால் மட்டுமே, வைரஸை சிறப்பாக எதிர்த்துப் போராட முடியும்" என்று உலக சுகாதார அமைப்பு (World Health Organization) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜூன் 29 அன்று ஒரு ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.


அதற்கான ஏற்பாடுகளை தொடங்க அடுத்த வாரம் ஒரு குழுவை சீனாவுக்கு (WHO's team in China) அனுப்புவோம். அந்த குழுவுக்கு வைரஸ் எவ்வாறு தொடங்கியது என்பதையும், எதிர்காலத்தில் என்ன செய்ய முடியும் என்பதையும் புரிந்துகொள்ள வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே அடுத்த வாரம் ஒரு அணியை சீனாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.