எச்சரிக்கை...! சீனாவிலிருந்து மற்றொரு புதிய கொடிய வைரஸ் பரவும் அபாயம்...

சீனாவின் வுஹானில் இருந்து கொரோனா வைரஸ் பரவிய சில மாதங்கள் கழித்து, தற்போது மற்றொரு புதிய கொடிய வைரஸ் சீனாவில் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Updated: Jun 30, 2020, 03:26 PM IST
எச்சரிக்கை...! சீனாவிலிருந்து மற்றொரு புதிய கொடிய வைரஸ் பரவும் அபாயம்...
Representational Image

சீனாவின் வுஹானில் இருந்து கொரோனா வைரஸ் பரவிய சில மாதங்கள் கழித்து, தற்போது மற்றொரு புதிய கொடிய வைரஸ் சீனாவில் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

ஒரு ஆய்வின்படி, சீனாவில் பன்றிகளில் காணப்படும் இந்த புதிய வைரஸ் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்து விளைவிக்கும் தொற்றுநோயாக மாறும் என கூறப்படுகறிது. இது ஒரு 'தொற்று வைரஸ்' என நிரூபிக்கக்கூடும் என்பதால் உன்னிப்பாக கவனிக்கப்பட விஷயமாக தற்போது உருமாறியுள்ளது. இருப்பினும், இந்த வைரஸில் இருந்து உடனடி ஆபத்து எதுவும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

READ | கோவை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா...

இந்த வைரஸ் பன்றி வளர்ப்பு தொழிலாளர்களின் இரத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மனிதர்களில் வைரஸை கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆய்வாலர்கள்கள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக பன்றி வளர்ப்பு தொழிலில் பணிபுரிபவர்கள் இதுதொடர்பான சோதனையை மேற்கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர். இந்த ஆய்வு வைரஸின் அபாயத்தை விவரித்துள்ளது, இது மக்கள் அடர்த்தியான பகுதிகளில், குறிப்பாக சீனாவில் வாழக்கூடிய மக்களுக்கு பரவக்கூடும். பண்ணைகள், கால்நடை வளர்ப்பு மையங்கள், இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சி-மீன் சந்தைகளுக்கு அருகில் இருப்பவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் எனவும் வலியுறுத்துகிறது.
 
உலகளவில் கொரோனா தொற்றுநோயை பரப்பும் வைரஸ் தொடர்பாக பேசுகையில், இது தென்மேற்கு சீனாவில் குதிரை ஷூ போன்ற நாசி மட்டையில் தோன்றியதாக நம்பப்படுகிறது, மேலும் வுஹானில் உள்ள கடல் உணவு சந்தை வழியாக மனிதர்களுக்கு பரவியது எனவும், அங்கு தான் வைரஸ் முதல் அடையாளம் காணப்பட்டது எனவும் நம்பப்படுகிறது. இந்நிலையில் தற்போது சீனாவில் புதிதாக உருவாகி வரும் பன்றி காய்ச்சல் வைரஸ் உலக மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

READ | சலூன் கடைகள் செயல்பட அனுமதி... இயல்பு நிலைக்கு திரும்புகிறதா மும்பை?