சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லீம் குழந்கைகளுக்கு 12 பெயர்களை வைக்க சீன அரசு தடை விதித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். சீன அரசின் புதிய சட்டத்தின்படி முஸ்லிம்கள், பொது இடங்களில் முகத்தை மறைக்கும் துணியை அணிவது மற்றும் வழக்கத்திற்கு மாறாக நீளமான தாடி வளர்ப்பது, தொழுகை நடத்தக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.


இந்நிலையில் அங்கு வசிக்கு முஸ்லீம் குழந்தைகளுக்கு , முஸ்லீம் , குரான், மெக்கா, ஜிகாத், இமாம், சதாம், ஹஜ் மற்றும் மதினா உள்ளிட்ட 12 விதமான பெயர்கள் வைக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. 12 விதமான பெயர்கள் வைத்திருக்கின்ற முஸ்லீம் குழந்தைகளுக்கு சீன பள்ளிகளில் படிப்பதற்கு அனுமதி இல்லை. 


சீன அரசின் இந்த தடையால் அங்கு வசிக்கும் முஸ்லிம்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இந்நடவடிக்கையை மனித உரிமைகள் ஆணையத்தை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.