சீனாவின் மத்திய குழு தீர்மானம்; நிரந்திர அதிபராகிறாரா ஜி ஜின்பிங்..!!!
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மத்தியக் குழுவின் நான்கு நாள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம், ஜி ஜின்பிங் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மத்தியக் குழுவின் நான்கு நாள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம், ஜி ஜின்பிங் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார். கட்சி நிறுவனர் மாவோ சேதுங்கிற்குப் பிறகு மிகவும் சக்திவாய்ந்த தலைவராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜி ஜின்பிங் 9 ஆண்டுகளாக சீன அதிபராக உள்ளார். அடுத்த ஆண்டுடன், அவரின், 2வது அதிபர் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. எனவே, அரசியல் ரீதியாக, ஜி ஜின்பிங்கிற்கு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்ட நிலையில், அவர் ஆட்சியில் இருந்த கடந்த ஒன்பது ஆண்டுகளில் கட்சி நிறுவனர் மாவோ சேதுங்கிற்குப் பிறகு மிகவும் சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில், ஜின்பிங்கின் வழிகாட்டுதலின் கீழ், வரலாற்று சிறப்பு மிக்க முன் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் முக்கிய கொள்கைகள், முன்முயற்சிகள் காரணமாக சீனாவில் (China) சாவல்கள் எளிதாக கையாளப்பட்டன என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ALSO READ | டெல்டா மாறுபாட்டால் சீனாவில் மீண்டும் தலைதூக்கி பீதியைக் கிளப்பும் கொரோனா வைரஸ்
கட்சியில் "தோழர் ஜி ஜின்பிங்கின் (Xi Jingping) முக்கிய பதவி மற்றும் அதிகாரத்தை நீடிக்க வேண்டும் " என்று கட்சி உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து, கட்சித் தலைவராக ஜி ஜின்பிங்கின் மூன்றாவது பதவிக்காலத்தை உறுதிப்படுத்த இது உதவும் என்றும் சில நிபுணர்கள் நம்புகின்றனர்.
"கட்சியில் ஒழுக்கம் மற்றும் விசுவாசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையில், தீர்மானத்தை ஆதரிக்காத எந்தவொரு கட்சி உறுப்பினரும் பேரழிவை சந்திக்க நேரிடும், அதனால், இந்த தீர்மான முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றே" என்று பீக்கிங் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் விரிவுரையாளரான யாங் சாவ்ஹூய் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
"சீன அம்சங்களுடன் கூடிய ஜி ஜின்பிங்கின் சோசலிச புதிய சகாப்தத்தை முழுமையாகச் செயல்படுத்த, தோழர் ஜி ஜின்பிங்கை தலைமையில், கட்சி மத்தியக் குழுவைச் சுற்றி மிகவும் நெருக்கமாக ஒன்றுபடுமாறு, கட்சி, இராணுவம் மற்றும் அனைத்து இன மக்களுக்கும், கட்சியின் மத்தியக் குழு அழைப்பு விடுத்த்துள்ளதாக " கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆவணம் வாசிக்கப்பட்டது.
ALSO READ | சீனாவின் இம்சையால் கடுப்பான Yahoo, மிக பெரிய முடிவை எடுத்தது நிறுவனம்
68 வயதான ஜி ஜின்பிங், சீனாவின் அதிகார மையங்களை தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், ராணுவத்தின் உயர் கட்டளையகமாக உள்ள, சக்திவாய்ந்த மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவர் மற்றும் அதிபர் பதவி என முழுமையான அதிகாரம் உள்ள அனைத்தும் ஜி ஜின்பிங் வசம் உள்ளது. எனவே சீனாவில் ஜி ஜின்பிங் கை எப்போதுமே ஓங்கி உள்ள நிலையில், இது எதிர்பார்த்தது தான் கூறுகின்றனர் உலக அரசியல் ஆர்வலர்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR