ஹாங்காங்: சீனாவில் இருந்து தனது வர்த்தகத்தை திரும்பப் பெற்றதாக Yahoo Inc. செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் வணிக மற்றும் சட்ட சவால்களை மேற்கோள் காட்டி இந்த முடிவை எடுத்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன அதிகாரிகள் நாட்டில் இணைய தணிக்கையை கடுமையாக அமல்படுத்தி வருகின்றனர், இதன் காரணமாக Yahoo போன்ற நிறுவனங்கள் பெரும் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.
நிறுவனங்கள் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன
சீனாவில் (China) செயல்படும் நிறுவனங்கள் அரசியல் ரீதியாக உணர்திறன் மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கம் மற்றும் வார்த்தைகளைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "சீனாவில் வளர்ந்து வரும் வணிகம் மற்றும் சட்டரீதியான சவால்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து Yahoo சேவைகளும் நவம்பர் 1 முதல் சீனாவில் செயல்பாடாது." என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ALSO READ | கருப்பாக மாறிய 'கமாங்க் ஆறு': செத்து மிதக்கும் மீன்கள்! காரணம் என்ன?
சீனா இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறது
சீனா சமீபத்தில் தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது, இது எந்த தகவலை நிறுவனங்கள் சேகரிக்கலாம் மற்றும் அவற்றை எவ்வாறு சேமிக்கலாம் என்பதை அமைக்கிறது. சீனாவில் செயல்படும் நிறுவனங்கள், அதிகாரிகளின் தேவைக்கேற்ப தரவை வழங்க வேண்டும் என்றும் சீனாவின் சட்டங்கள் வழங்குகின்றன. இது மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்கள் அங்கு செயல்படுவதை கடினமாக்குகிறது, ஏனெனில் அவர்கள் சீனாவின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய தங்கள் நாட்டில் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR