கொரோனா நான்காவது அலை இந்தியாவைத் தாக்கக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், 26 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட அதன் மிகப்பெரிய நகரமான ஷாங்காயில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் காரணமாக லாக்டவுனை அமல்படுத்த சீனா முடிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லாக்டவுன்  பகுதிகளில்  பொது போக்குவரத்தையும் நிறுத்துவதாக நகர அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை கூறியது. பொதுச் சேவைகளை வழங்குபவர்கள் அல்லது உணவு வழங்குபவர்கள் தவிர, நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும்  என உத்தரவிடப்பட்டுள்ளது. அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசியமாகக் கருதப்படாத அனைத்து வணிகங்களும் மூடப்படும் மற்றும் பொது போக்குவரத்து நிறுத்தப்படும்.


மேலும் படிக்க | புதிய சோஷியல் மீடியா தளத்தை தொடங்குகிறாரா எலான் மஸ்க்? அவரே கூறிய பதில்


ஷாங்காயில் உள்ள பல  குடியிருப்பு பகுதிகள் ஏற்கனவே  பொது ஊரடங்கில் தான் உள்ளன. ஷாங்காய் டிஸ்னி தீம் பார்க் உட்பட பல வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


மார்ச் மாதத்தில் சீனாவில் 56,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ்  தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.  எனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொற்றுநோய் பரவல் தொடங்கிய போது பெய்ஜிங் 'டைனமிக் ஜீரோ-கோவிட்' என்னும் தீவிரமான லாக்டவுன் அணுகுமுறையை தற்போது செயல்படுத்த  முடிவெடுத்துள்ளது.


இதன் கீழ் குறிப்பிட்ட காலத்திற்கு நகரங்களில் முழுமையான லாக்டவுனை அமல்படுத்துவதன் மூலம், சமூகத்தில் பரவும் வைரஸை விரைவில் ஒழிப்பதில் கவனம் செலுத்துகிறது.


இதற்கிடையில், சீனாவின் தடுப்பூசி செலுத்தப்பட்ட விகிதம் சுமார் 87 சதவீதமாக உள்ளது. எனினும் இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட தேசிய தரவு 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 52 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எந்தவொரு கோவிட்-19 தடுப்பூசியுடனும் இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை  என்பதை தெரிவிக்கின்றன.


அதே போன்று பூஸ்டர் விகிதங்களும் குறைவாகவே உள்ளன, 60-69 வயதுக்குட்பட்டவர்களில் 56.4 சதவீதம் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸை பெற்றுள்ளனர், மேலும் 70-79 வயதிற்குட்பட்டவர்களில் 48.4 சதவீதம் பேர் ஒரு பூஸ்டர் டோஸை பெற்றுள்ளனர்.


மேலும் படிக்க | நம்பரை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்வது எப்படி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR