போர்ப்பயிற்சியை தொடங்கிய சீனா : தைவான் கடற்பகுதியில் உச்சக்கட்ட பதற்றம்
China’s Military Drill : தைவானைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் சீனா ராணுவப் பயிற்சியை தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதி வரும் நிலையில், அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி நேற்று தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். அவரது இந்தப் பயணம் சீனாவைக் கொந்தளிப்படைய வைத்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சன்யிங், அமெரிக்காவுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படுமெனத் தெரிவித்தார். இந்த நிலையின் தைவானின் கடற்பரப்பைச் சுற்றி சீனா ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளதால் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை போர் ஒத்திகை நடைபெறும் என சீனா அறிவித்துள்ளது.
இந்த போர்ப்பயிற்சிக்காக தீவைச் சுற்றியுள்ள ஆறு முக்கிய பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த காலகட்டத்தில், தொடர்புடைய கப்பல்கள் மற்றும் விமானங்கள் தொடர்புடைய நீர் மற்றும் வான்வெளிகளுக்குள் நுழையக்கூடாது எனவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகின் பரபரப்பான நீர்வழித்தடங்களில் ஒன்றான தைவான் நீர்பரப்பில் நடைபெற்று வரும் இந்த ராணுவ ஒத்திகையால் உலகம் முழுவதும் விநியோக சங்கிலி பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | தைவானில் கால் வைத்த நான்சி பெலோசி : சீனா இனி என்ன செய்யும்?
இந்த ஆண்டின் 7 மாதங்களில், உலகிலுள்ள பாதி சரக்குக் கப்பல்கள் சீன நிலப்பரப்பில் இருந்து தைவானை பிரிக்கும் குறுகிய நீர்வழி வழியாகவே சென்றுள்ளன. ஏற்கனவே உக்ரைன் - ரஷ்யா போரினால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கை உலக சந்தையில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களில், தைவானுக்கு மிக அருகில் உள்ள சீன மாகாணமான புஜியானில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் 400 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, இதன் மூலம் சீனா விமானப்படை பயிற்சியையும் விரைவில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | சீனாவின் மிரட்டலை மீறி, தைவான் பயணம் மேற்கொள்ளும் நான்சி பெலோசி
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ