அமெரிக்க-தைவான் உறவுகளை வலுப்படுத்துவதற்கு தைவான் (Taiwan) அதிபர் சாய் இங்-வென் (Tsai Ing-Wen) முழு முக்கியத்துவம் அளிக்கிறார். இதற்காக அவர் அமெரிக்க தூதுக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதையடுத்து அவர்களுக்காக சிறப்பு விருந்தையும் வழங்கினார். தற்போது, அமெரிக்காவின் உயர்மட்ட தூதுக்குழு தைவானுக்கு வருகை தரவிருக்கும் நிலையில், சீனாவின் போர் விமானங்கள் தைவான் வான்வெளியில் பறந்து, தங்கள் அச்சுறுத்தின. வானில் இருந்து குண்டு வீசும் திறன் கொண்ட இரு விமானங்கள் உட்பட 18 போர் விமானங்கள் மற்றொரு நாட்டின் மீது ஒரே நேரத்தில் பறப்பது இயல்பான நிகழ்வல்ல.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சீன விமானங்களை தைவானின் போர் விமானங்களால் நிறுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியவில்லை. சீன விமானங்கள், வான்வெளியில் சாகசம் நடத்துவதுபோல் மிடுக்காக வட்டடமிட்டுச் சென்றன. ஆனால், இதை தற்காப்பு விஷயமாக கூறும் சீனா, இந்த விஷயத்தில் வெளி நாடுகள் தலையிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தது. ஆனால், இந்த நடவடிக்கை இறையாண்மையை மீறுவதாக தைவான் கூறியது. 


இதற்கிடையில், வெள்ளிக்கிழமையன்று, தைவான் அருகே போர் பயிற்சி ஒன்றையும் சீன ராணுவம் மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்காவும் தைவானும் தங்கள் போர் விமானங்களை அந்தப் பகுதிக்கு அனுப்பி, முழுப் பகுதியிலும் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளன.


நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு தைவானுக்கு வருகை தரும் அமெரிக்காவின் உயர் அதிகாரி  
அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரியான Keith Crutch தற்போது தைவானுக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார். நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தைவானுக்கு அரசுமுறைப் பயணமாக வருகிறார்.  தைவானின் அதிபர் சாய் இங்-வென் அவருக்கு விருந்தை வழங்கினார். தைவானும் அமெரிக்காவும் இந்த பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சியை நோக்கி ஒன்றிணைந்து செயல்படும் என்று நம்புவதாக கூறும் சாய் இங்-வென், இதனால் முழு ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கும் ஆக்கப்பூர்வமான விளைவு ஏற்படுவதாக கருதுகிறார்.  



தைவான்-அமெரிக்கா: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி நகர்கின்றன
அமெரிக்காவுடன் தைவான் தனது பொருளாதார ஒத்துழைப்பை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சாய் இங்-வென் கூறினார். இதற்காக இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், இரு நாடுகளுக்கும்  இடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதில் இரு நாடுகளுக்கும் நன்மை ஏற்படும் என்றும் கூறினார். Taiwan Semiconductor Manufacturing Co Ltd அமெரிக்காவில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது.


இந்நிறுவனம் அமெரிக்காவின் அரிசோனாவில் (Arizona) 12 பில்லியன் டாலர் செலவில் ஒரு தொழிற்சாலையை அமைத்து வருகிறது. டொனால்ட் ட்ரம்ப்பின் பிரச்சாரத்தின் ஒப்புதலாக இது கருதப்படுகிறது. இது, உலகளாவிய விநியோகச் சங்கிலியிலிருந்து சீனாவை விலக்கி வைக்க முயற்சிக்கும் அமெரிக்காவின் ராஜதந்திரமாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.