பிரபலமான வீடியோ பகிர்வு செயலியான TikTokஇன் உரிமையாளரான சீன நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance), தனது அமெரிக்க பங்குகளை ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கும் காலக்கெடுவை நெருங்குகிறது. இருப்பினும், இதுவரை எந்த நிறுவனத்துடனும் ByteDance ஒப்பந்தம் எதையும் இறுதி செய்யவில்லை.
மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் ByteDance-இன் அமெரிக்க பங்குகளை கையகப்படுத்தும் என்று வதந்திகள் வெளியாகின, ஆனால் பல வாரங்கள் திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.. Oracle Corp, இப்போது, நிறுவனத்தின் சிறிய அளவிலான பங்குகளை வைத்திருக்கும். ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த தடையால் அந்த ஒப்பந்தம் சரியாக செயல்படவில்லை.
இப்போது, இந்த விஷயத்தில் நெருக்கமாக பணியாற்றும் மக்கள், TikTok Global உள்ளூர் நிறுவனங்களுக்கு ஆரம்ப பொது சலுகையை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே டிக்டோக் முன்மொழிந்துள்ள ஒப்பந்தத்திற்கு டிரம்ப் நிர்வாகம் ஒப்புக் கொண்ட பின்னரே திட்டங்கள் இறுதி செய்யப்படும்.
இந்த புதிய நிறுவனத்தின் இயக்குநர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கர்களாக இருப்பார்கள், அதேபோல் தலைமை நிர்வாகி மற்றும் குழுவில் பாதுகாப்பு நிபுணர்களும் அமெரிக்கர்களாக இருப்பார்கள். இந்த முன்மொழிவுக்கு டிரம்ப் நிர்வாகம் உடன்படும் என்று ByteDance நிறுவனம் நம்புகிறது.
டிக்டோக்கின் புதிய ஒப்பந்தத்தில் ஆரக்கிளின் பங்கு ஓரளவே இருப்பது பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக இந்த ஒப்பந்தத்தை எடுக்க வேண்டாம் என்று பல எம்.பிகள் அறிவுறுத்திய பின்னர் டிரம்ப் தனது கருத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிட்த்தக்கது.
புதிய ஒப்பந்தத்தினால், புதிய மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட டிக்டோக் குளோபல் (TikTok Global) குழுவில் ஆரக்கிள் (Oracle) மற்றும் வால்மார்ட்டுக்கு (Walmart) இடம் பெற வாய்ப்பு ஏற்படும். ஆரக்கிள் இந்த நிறுவனத்தில் 20 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.
ஒப்பந்தத்தின் இறுதி விவரங்கள் விரைவில் தெரியவரும். இப்போதைக்கு, "பெரிதாக எதுவும் மாறவில்லை" என்று சொல்வதைத் தவிர வேறு எந்த விவரங்களையும் டிரம்ப் வழங்கவில்லை.
Read Also | இந்தியாவில் Compact SUV Kia Sonet காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை என்ன?