சீனாவின் ஆதிக்க குணம் உலகம் அறிந்த விஷயம். அது உலகெங்கிலும் கால்களைப் பரப்பி ஆதிக்கம் செய்ய நினைக்கிறது.  அண்டை நாட்டின் பகுதிகளை ஆக்கிரமிக்க திட்டமிடுகிறது. எல்லைகளை விரிவு படுத்த வேண்டும் என்ற பேராசையில், எந்த அளவிற்கும் இறங்கி மோசமாக செயல்பட அஞ்சாத நாடு சீனா.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

க்ளோபல் வாட்ச் அனாலிசிஸ் (Global Watch Analysis) என்ற பத்திரிகையில் வந்த கட்டுரை ஒன்றில், சீனா பொருளாதார ரீதியாக வலுவாக இல்லாத நாடுகளில்,  அதன் ஊழல் தலைவர்களை பயன்படுத்திக்கொண்டு எப்படி தன் கால்களை வலுவாக ஊன்றியுள்ளது என்பது விளக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுரையை, ரோலண்ட் ஜாக்வர்ட் (Roland Jacquard) எழுதியுள்ளார்.


இதன் மூலம், சீனா(China)  தனது வர்த்தக நலன்களை நிறைவேற்றிக் கொண்டதோடு நீண்ட காலத்திற்கு தனக்கு பலன் தரும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.


ALSO READ இந்தியாவுடான எல்லை மோதலுக்கு சீனா கொடுத்த விலை என்ன…!!!


 


நேபாள(Nepal) பிரதமர் கே.பி. ஷர்மா ஒளியின் (KP Sharma Oli) சொத்து மதிப்பு கடந்த ஆண்டுகளில் மிக அதிக அளவு அதிகரித்துள்ளது பற்றி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமரும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான இவர் பெருமளவு சொத்துக்களை வெளிநாடுகளில் குவித்து உள்ளதாக கூறப்படுகிறது.


Mirabaud வங்கியின் ஜெனிவா கிளையில் இவருக்கு கணக்கு இருப்பதாக  இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. 5.5 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான நீண்டகால முதலீடுகள் பங்குகள் உள்ளதாகவும், அதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஷர்மா ஒளிக்கும் மனைவியான ராதிகா சக்யாவிற்கும் அரை மில்லியன் டாலர் அளவு வருமானம் கிடைப்பதாகவும் Roland Jacquard தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்


வர்த்தக பரிவர்த்தனைகள் என்ற பெயரில் பெருமளவிலான முதலீடுகள் செய்ய பிரதமர் ஒளிக்கு, சீனா உதவியதாகவும் அவர் உதாரணத்துடன் குறிப்பிட்டுள்ளார்.  2015-16 ஆம் ஆண்டுகளில், நேபாள பிரதமரின் முதல் பதவி காலத்தில் நேபாளத்திற்கான சீன தூதர் ஊ சுண்டாய் ( Wu Chuntai) உதவியுடன், கம்போடியாவில் தொலைத்தொடர்பு துறையில் முதலீடுகள்  செய்யப்பட்டதாக Roland Jacquard கூறியுள்ளார்.


இந்தப் வர்த்தக பரிவர்த்தனை, ஆங் ஷெரின் ஷெர்பா (Ang Shering Sherpa) என்ற நேபாள வர்த்தகர் மூலம் நிறைவேற்றப்பட்டது, இவர் ஒளிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | பாகிஸ்தானை தாண்டி பலிக்காத சீனாவின் நரித் தந்திரம்: ஒரு அலசல்


 


நேபாள பிரதமர் கேபி ஷர்மா ஒளியின் இரண்டாவது பதவிக் காலத்திலும் ஏராளமான ஊழல் குற்றசாட்டுகள் உள்ளன.


டிசம்பர் 2018 ஆம் ஆண்டில் டிஜிட்டல் ஆக்சன் ரூம் ( Digital Action Room) அமைப்பதற்கான ஒப்பந்தம், சீன தொலைத்தொடர்பு நிறுவனமான Huawei-க்கு வழங்கப்பட்டது. நேபாள அரசுக்கு சொந்தமான  தொலை தொடர்பு அமைப்பில், இந்த திட்டத்திற்கான சகல வசதிகள் இருந்தும் கூட, அதற்கு எந்தவித வாய்ப்பும் வழங்கப்படாமல் நேரடியாக சீன நிறுவனமான ஹுவாய்க்கு வழங்கப்பட்டது.


பின்னர் அது தொடர்பாக நடந்த விசாரணையில் பிரதமரின் அரசியல் ஆலோசகரான பிஷ்ணு ரிமால் என்பவரின் மகன், நிதி ஆதாயம் பெற்று இந்த பரிவர்த்தனையை நடத்தியதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டது.


இதேபோன்று, 2019 மேமாதம், நேபாளத்தில் தொலைதொடர்பு துறையில் 4ஜி நெட்வொர்க் அமைப்பதற்காக,நேபாளத்தில் உள்ள நிறுவனங்களுக்கு வாய்ப்பு ஏதும் தராமல், நேரிடையாக, சீனாவின் தொலைத் தொடர்பு கருவி உற்பத்தி நிறுவனமான ZTE உடன் ஒப்பந்தம் போடப்பட்டது. ஹாங்காங்கில் உள்ள சீன நிறுவனத்திடம் ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் (Radio Access Network) தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டது.


கொரோனா வைரஸ் பெரும் தொற்றை அரசு சரியாக கையாளவில்லை என்று, ஜூன் மாதத்தில் அரசுக்கு எதிரான மாணவர் போராட்டம் வெடித்தது.


சீனாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், சோதனைக் கருவிகள் ஆகியவற்றை வாங்குவதில் பெருமளவு ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.  பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் சோதனை கருவிகளின் விலைகள் மிகவும் அதிகமாக இருந்ததோடு மோசமான தரத்தை உடையதாகவும் இருந்தது.


கொரோனா தொற்றை கையாள செலவிடப்பட்ட தொகைகள் தொடர்பான தெளிவான அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறி வருகின்றனர் என்று அந்த பத்திரிகை கட்டுரையில் கூறிப்பட்டுள்ளது.


நேபாள சுகாதார அமைச்சர் மற்றும் பிரதமர் ஒளிக்கு நெருக்கமான மூத்த அதிகாரிகள் மீதும் இந்த குற்றசாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன


இந்நிலையில் ஊழல் தலைவர்களை பயன்படுத்தி, நேபாளத்தில், சீனா எவ்வளவு வலுவாக தன் கால்களை பதித்துள்ளது என்று தெளிவாக அறியலாம். நேபாள பிரதமர் கேபி ஷர்மா ஒளிக்கும், சீனாவிற்கு ஆதாயம் கொடுக்கும் வகையில் அனைத்து விதமான வர்த்தக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.


இதன் மூலம் சீனா நேபாளத்தில், வலுவாக ஊடுருவியுள்ளது.