சீனாவின் ஷெஹ்ஷான் தீவில் அமைந்துள்ள ஹுடோவன் கிராமம் கண்டதுமே மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது -SeePic's! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எங்கு பார்த்தாலும் பசுமையும், அமைதியும் நிறைந்த எழில் கொஞ்சும் இடங்களை பார்த்தால் எங்கே இருந்து விட கூடாதா என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் தோன்றும். சிலருக்கு நாம் எவ்வளவு கோவமாகவும், மன அழுத்தத்துடனும் இருந்தால் இப்படிப்பட்ட இடத்தை கண்டது அனைத்தையும் மறந்து அதை ரசிக்க ஆரமித்து விடுவோம். ஏனென்றால், இயற்க்கை நமக்கு கொடுத்த அனைத்தும் மன நிம்மதியை கொடுக்கக்கூடியது. 


இப்படி பட்ட ஒரு இடத்தை கொண்டுள்ளது சீன. சீனாவின் ஷாங்காய் கடற்கரையில் இருந்து சுமார் 90 கிமீ (56 மைல்கள்) தூர கிழக்கு பகுதியில் ஷெஹ்ஷான் தீவில் அமைந்துள்ளது ஹுடோவன் கிராமம். இந்த கிராமம் ஷேங்சனில் ஒரு கைவிடப்பட்ட மீன்பிடி கிராமம்.



இந்த தீவில் அமைந்திருக்கும் ஹுடோவன் கிராமத்தில் தற்போது ஒரு சிலர் மட்டுமே வசிக்கின்றனர். பசுமையான புதையுடனான பிளானட் நகரம், அடிவாரத்தை மறைக்கும் கடல் நீரோடைகள் மீது மேற்கு நோக்கிப் பார்க்கும் பாறைகளில் அமைந்துள்ளது. 



இயற்கை எழில் கொஞ்சும் இங்கே புல்வெளிகளும், மலைமுகடுகளும் கண்ணை கவர்கின்றன. வீடுகள் மற்றும் கட்டடங்களின் மீதும் செடிகளும், கொடிகளும் படர்ந்து, ஆக்கிரமித்து பார்க்கும் இடமெல்லாம் பசுமையாய் காட்சியளிக்கின்றன. காலநிலையால் சூழப்பட்ட கைவிடப்பட்ட வீடுகள் மற்றும் ஊர்ந்து செல்லும் கொடிகள் அமைதியாக நிற்கின்றன, ஆனால் சர்ப், கொசுக்கள், பறவைகள் ஒலித்துகொண்டே இருக்கின்றனர். 



சமீபத்தில், இந்த பகுதிக்கு சென்ற AFP செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர் ஜொஹான்னெஸ் எஜெலே, காணக்கிடைக்காத இந்த காட்சிகளை எடுத்துள்ளார். அடிப்படை வசதிகளைத் தேடி 1990 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பல குடும்பங்கள் இங்கிருந்து பிற இடங்களுக்கு சென்றுவிட்டனர். 1994 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட அனைத்து குடும்பங்களும் இங்கிருந்து வெளியேற, தற்போது ஒரு சிலர் மட்டுமே இங்கே வாழ்கின்றனர்.