கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் BF.7, BF.12 போன்ற கரோனா தொற்றுவகைகள் அதிகம் பரவும் தன்மையுடையது எனக்கூறப்படும் நிலையில், இவை நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், அனைவரும் மீண்டும் மாஸ்க், சமூக இடைவெளி, கொரோனா வழிமுறைகள், தடுப்பூசிகள் என தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், அவர் சீனாவை சேர்ந்த பாடகி வேண்டுமென்ற கொரோனா தொற்றை ஏற்படுத்திக்கொண்டதாக பொதுவெளியில் தற்போது தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து சீன பாடகி ஜேன் ஜாங் சமூக வலைதளங்களில் கூறியதாவது,"வரும் புத்தாண்டு தினத்தன்று, இசை நிகழ்ச்சியில் பாட உள்ளேன். அப்போதுதான், நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக் கூடாது என்பதால், ஏற்கெனவே தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை சந்தித்தேன். தொற்றில் இருந்து மீள்வதற்கு சில நாள்கள் கிடைக்கும் என்பதாலும், இசை நிகழ்ச்சியில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று இதை செய்தேன்" என்றார். 



தொடர்ந்து, தொற்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பிறகு தனக்கு கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், தொண்டை பாதிப்பு, உடல்வலி ஆகியவை ஏற்பட்டதாகவும் ஆனால், ஒருநாளிலேயே மறைந்துவிட்டதாகவும் பாடகி தெரிவித்துள்ளார். "ஒரு நாள், ஒரு இரவு தூங்கி எழுந்த பிறகு எனது அனைத்து அறிகுறிகளும் மறைந்துவிட்டது. நிறைய தண்ணீரையும், விட்டமிண் சி உணவுகளையும் உட்கொண்டேன். மருத்து மாத்திரைகள் எடுப்பதற்கு முன்பே நான் குணம் பெற்றுவிட்டேன்" என்றார்.


மேலும் படிக்க | சீனாவை கதறவிட்ட 'BF.7' கொரோனா தொற்று... இந்தியாவுக்கும் வந்துவிட்டது - அடுத்தது என்ன?


அவரின் இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து, அவரின் நடத்தையை பொறுப்பற்றது என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக சீனாவில் கொரோனா அதிகரித்து வரும், அவரது செயலை பலரும் கண்டித்தனர். இதையடுத்து, மேற்கூறிய சமூக வலைதள பதிவை அந்த பாடகி நீக்கிவட்டு, பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார். 


"எனது முந்தைய பதிவு உருவாக்கும் விளைவுகள் குறித்து, நான் சில விஷயங்களை யோசிக்கவில்லை. நான் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," என்று சீனாவின் பிரத்யேக சமூக வலைதளம் வைப்போவில் பதிவிட்டுள்ளார்.


"இசை நிகழ்ச்சி நடைபெறும்போது எனக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், அது எனது சக ஊழியர்களுக்கு மீண்டும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று நான் கவலைப்பட்டேன்” என்று ஜாங் விளக்கினார்.


SCMP இன் கூற்றுப்படி, "டால்பின் இளவரசி" என்று அழைக்கப்படும் பாடகி, 2005இல் ஒரு தேசிய பாட்டுப் போட்டியில் வென்ற பிறகு கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக சீனாவில் பிரபலமான இசை நட்சத்திரமாக இருந்து வருகிறார்.


மேலும் படிக்க | கொரோனா ஒரு பக்கம்! பறவைக் காய்ச்சல் இன்னொரு பக்கம்? உலகத்திற்கே சுகாதார அச்சுறுத்தல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ