Second World War And Women: உலகம் முழுவதும், மார்ச் 8 ஆம் தேதி பெண்களுக்கான சிறப்பு நாளாக, சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மிகவும் பேசப்படும் ஆறுதல் பெண்கள் (Comfort Women). உலகப் போரின் போது அவர்கள் என்னென்ன துன்பங்களை அனுபவித்தார்கள் என்பது பற்றிய கதை இந்த தலைமுறையினருக்கு கண்டிப்பாக தெரிய வேண்டிய விஷயம். பெண்களின் உரிமை என்பது உலகில் எந்த நிலையில் இருந்தது என்பதைத் தெரிந்துக் கொண்டால் தான், மகளிர் தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு தினம் தேவைப்படும் நிலை என்ன என்பது புரியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜப்பான் மற்றும் கொரியா


ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் இடையிலான போட்டி மிகவும் பழையது. இரண்டாம் உலகப் போரின்போது, ​​ஜப்பானின் ராயல் ஆர்மி மிகவும் வலுவாக இருந்தது என்பதும், கொரியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வறுமை இருந்ததும் உலக வரலாறு.  


இரண்டாம் உலகப் போரின் அவமானகரமான கதைகள்
லட்சக்கணக்கான ஜப்பானிய வீரர்கள் இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்தனர். அவர்களிடம் தளவாடங்களுக்கும் ஆயுதங்களுக்கும் பஞ்சமில்லை. ஜப்பானிய வீரர்களின் உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான தேவை மட்டுமே எஞ்சியிருந்தது. இந்தத் தேவையை பூர்த்தி செய்ய நினைத்த ஜப்பான், நூற்றுக்கணக்கான ஆறுதல் நிலையங்களை ஒரே இரவில் தயார் செய்தது.


பெண்களை கடத்தி, பாலியல் அடிமைகளாக தளவாடங்களுடன் சேர்த்து மற்றொரு பொருளாக முகாம்களில் அடைத்துவைத்தார்கள். பெண்களை அடிமைகளாக வைத்திருக்கும் மையங்களில் அடைத்து வைக்கப்பட்ட பெண்களை அவர்கள் தேர்தெடுத்தது எதன் அடிப்படையில் என்பது அவமானகரமானது.


பாலுறவில் ஈடுபட்ட அனுபவம் இல்லாத பெண்களாக இருக்க வேண்டும் என்பதால், பெரும்பாலும், சிறுமிகளே இந்த பாலியல் அடிமைகளாக தேர்வு செய்யப்பட்டனர்.  



1910 இல் கொரியாவை ஆக்கிரமித்த ஜப்பான் 
பெண்களை ஒடுக்கும் இந்த வேதனையான இந்த உண்மைச் சம்பவங்கள் சுமார் 115 ஆண்டுகள் பழமையானது. 1910-ம் ஆண்டு தொடங்கி 1945 வரை நடந்த கொடுமைகளை ஜப்பான் செய்த அந்த நேரத்தில், கொரியா உட்பட ஆசியாவின் பெரும்பகுதியை ஜப்பான் ஆட்சி செய்தது.


ஜப்பானியர்கள் ஆட்சியில் மக்கள் மீது பல கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதற்காக, பின்னர் டோக்கியோ மன்னிப்பு கேட்டது, ஆனால் இழப்பீடு வழங்க மறுத்தது. அப்போது இருந்து, ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துவந்தாலும், இப்போது, ​​மாறிவரும் புவிசார் அரசியல் சூழ்நிலையில் சீனா மற்றும் வடகொரியாவின் சக்தி அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஜப்பானும் தென் கொரியாவும் மீண்டும் நெருங்க முடிவு செய்தன. 


ஜப்பானிய குடும்பப்பெயர்களை கொண்ட கொரியர்கள் 
கொரியர்கள் காலனித்துவ காலத்தில் ஜப்பானிய குடும்பப்பெயர்களை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் இரண்டாம் உலகப் போரின்போது, ​​அவர்கள் ஏகாதிபத்திய இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர் அல்லது சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


ஜப்பான் ஆசியா முழுவதிலும் இருந்து மில்லியன் கணக்கான பெண்களைக் கடத்திச் சென்றது, அதில் கொரியப் பெண்களே அதிக எண்ணிக்கையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தகக்து. 1945 ஆம் ஆண்டு அணுகுண்டு தாக்குதலுக்குப் பிறகு ஜப்பான் சரணடைந்தது, அப்போதுதான் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்ட பெண்களின் கதை உலகின் முன் வந்தது.



கொரியப் போரின் ஆரம்பம்
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்டது கொரிய தீபகற்பம். இதற்கிடையில், கம்யூனிஸ்ட் வட கொரியா, 1950 ஜூன் மாதம் முதலாளித்துவ தென் கொரியா மீது படையெடுத்தது, மில்லியன் கணக்கானவர்களைக் கொன்ற கொடூரமான போராக அது இருந்தது.


இந்த மோதல் ஒரு முழுமையான சமாதான உடன்படிக்கையால் நிறுத்தப்படவில்லை. போர்நிறுத்த ஒப்பந்தம் மட்டுமே தற்போது வடகொரியா மற்றும் தென்கொரியாவின் இடையில் உள்ளது.  


1965 ஒப்பந்தம்
கொரியப் போருக்குப் பிறகு அர்த்தமுள்ள சீர்திருத்தங்களைத் தொடங்க பொருளாதார உதவிக்கு ஈடாக 1965 இல் தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி பார்க் சுங் ஹீ ஜப்பானுடனான உறவை இயல்பாக்க ஒப்புக்கொண்டார். 1965 உடன்படிக்கையின் கீழ், மானியங்கள் மற்றும் இலகுவான கடன்களுடன் $800 மில்லியன் இழப்பீட்டுத் தொகுப்புக்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.


இதன்மூலம் காலனித்துவ நாடாக இருந்த தென் கொரியா சமாதனமானது. ஆனால் ஆறுதல் பெண்கள் தொடர்பான கோரிக்கைகளுக்கு ஜப்பான் பொறுப்பேற்கவில்லை. இதனால், தென் கொரியாவில் ஒரு பிரிவு ஜப்பானை பகிரங்கமாக எதிர்க்கத் தொடங்கியது. இந்தக் கோபத் தீ இன்றும் கனன்றுக் கொண்டே இருக்கிறது.


மேலும் படிக்க | தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக திருமதி குஷ்பு சுந்தர் நியமனமும் பின்னணியும்


1990 களில் ஆறுதல் பெண்கள்
ஜப்பான் நாட்டால், போர் வீரர்களுக்காக பாலியல் அடிமையாக்கப்பட்ட பெண்களில், ஆறுதல் பெண்ணாக அங்கீகரிக்கப்பட்ட கொரியப் பெண் கிம் ஹக். ஆகஸ்ட் 1991 இல் ஜப்பானிய இராணுவத்திற்கு பாலியல் சேவைகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஆறுதல் பெண்களின் மீது நடந்த அட்டூழியங்கள் பற்றி சாட்சியமளிக்க அவர் முன் வந்தார்.


ஜப்பானிய ராணுவ வீரர்களின் கொடூர கோர முகத்தை உலகின் முன் கொண்டு வந்து நிறுத்திய பெண் அவர். அவரது இந்த முடிவு, கொரியா, சீனா, தைவான், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மில்லியன்கணக்கான பெண்களை தங்கள் அட்டூழியங்களின் கதையை வெளிப்படையாகச் சொல்ல ஊக்கப்படுத்தியது.


1995 இல் மன்னிப்பு கேட்ட ஜப்பான் 
ஆறுதல் நிலையத்தின் காயங்களை உடலாலும் மனதாலும் பல தசாப்தங்களாக சுமந்துக் கொண்டிருந்த பெண்களின் கதைகள் உலகின் முன் வெளிவந்த பிறகு,1995-ல் அப்போதைய ஜப்பான் பிரதமர் டோமிச்சி முராயமா, ஜப்பானின் காலனித்துவ ஆட்சியின் போது நடந்த அட்டூழியங்களுக்கு மன்னிப்பு கேட்டார்.


1998 ஆம் ஆண்டு அப்போதைய தலைவர்களான கெய்சோ ஒபுச்சி மற்றும் கிம் டே ஜங், மற்றொரு ஜப்பானிய பிரதமர் ஜூனிசிரோ கொய்ஸ் என பல ஜப்பானியத் தலைவர்களுக்கும் ஆறுதல் பெண்களிடம் மன்னிப்புக் கேட்டனர். மற்றொரு ஜப்பானிய பிரதமரான ஜூனிச்சிரோ கொய்சுமி, உயிர் பிழைத்திருக்கும் அனைத்து 'ஆறுதல் பெண்களுக்கு' தனிப்பட்ட பொறுப்பை 2001 இல் ஏற்றுக் கொண்டார். 


மேலும் படிக்க | உலக மகளிர் தினம் எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா?


கொரிய பெண்ணின் சோகம்
தென் கொரியாவும் ஜப்பானும் டிசம்பர் 2015 இல் ஒரு ஒப்பந்தத்தை எட்டின. இதன் கீழ் டோக்கியோ ஒரு பில்லியன் யென்களை எஞ்சியிருக்கும் ஆறுதல் பெண்களுக்கு வழங்கியது. அந்த நேரத்தில், உயிர் பிழைத்த ஒரு கொரிய கம்ஃபர்ட் வுமன், தனது கதையை சொன்னதும், கேட்டவர்களின் கதி கலங்கியது.


“சில வீரர்கள் வீட்டிற்கு வந்து என்னை ஒரு டிரக்கில் அழைத்துச் சென்றபோது எனக்கு 17 வயது. டிரக்கில் என் வயதுடைய பல பெண்கள் இருந்தனர். ஒரு நீண்ட பயணத்திற்குப் பிறகு, நாங்கள் ஒரு ஆற்றின் அருகே ஒரு தொழிற்சாலையில் இறக்கிவிடப்பட்டோம். ஒவ்வொரு பெண்ணும் ஒரு சிறிய அறையில் - ஒவ்வொரு அறைக்கும் ஒரு எண் இருந்தது. சில மணி நேரம் கழித்து ஒரு ராணுவ வீரர் என் அறைக்கு வந்து என்னை பலாத்காரம் செய்து விட்டு, அடித்து விட்டு வெளியேறினார். அறைக்கு வெளியே பல வீரர்கள் இருந்தனர். ஒவ்வொருவராக உள்ளே வந்து என்னை பலாத்காரம் செய்துவிட்டு செல்வார்கள். எதிர்ப்பு தெரிவித்தவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு, அருகில் ஓடிய பனிக்கட்டி ஆற்றில் வீசப்பட்டனர்.
 
மகளிர் தினம்


பல ஆண்டுகளாக, சீனா, தைவான் போன்ற நாடுகளின் மக்கள் மீது ஜப்பானிய ராணுவம் ஆபத்தான சோதனைகளைச் செய்தது. ஜப்பானிய யூனிட் 731 ஒரு ஆய்வகமாக இருந்தது. போர்க் கைதிகள் மீது பல வகையான தவழும் உயிரியல் பரிசோதனைகள் செய்யப்பட்டன.


யாருக்கும் சந்தேகம் வராத வகையில், சோதனைகள் மேற்கொள்வதற்காக  சீன பகுதியில் இந்த ஆய்வகம் கட்டப்பட்டது. லெப்டினன்ட் ஜெனரல் இஷாய் ஷிரோ இந்தப் பிரிவைத் தொடங்கினார். ஆறுதல் பெண்கள் மீது ஆபத்தான பரிசோதனைகள் இங்கு செய்யப்பட்டன.


கொடிய வைரஸ் அல்லது பாக்டீரியாவை உடலில் வைத்து பரிசோதிப்பதுபோல, ஆரோக்கியமான சீனப் பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுடன், நோய்வாய்ப்பட்ட சீனப் படைவீரர்கள் கட்டாய வல்லுறவு கொள்ள வைத்தனர். அதாவது, நோய்கள் எப்படி பரவுகிறது என்று பரிசோதனை செய்வதற்காக இந்த உத்தி பயன்படுத்தப்பட்டது.


பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் எப்படி, எவ்வளவு வேகமாகப் பரவுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும், வயிற்றில் வளரும் குழந்தையின் மீது பாக்டீரியாவின் தாக்கம் என்ன? என்பதை தெரிந்துக் கொள்ளவும் ஜப்பான் இதுபோன்ற சோதனைகளை நடத்தியது.


மேலும் படிக்க | அச்சம் தேவை இல்லை, காவல்துறை உங்களுடன் இருக்கும்: வடமாநில தொழிலாளர்களுக்கு டிஎஸ்பி நம்பிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ