Women Longevity: மரணத்தைத் தள்ளிப்போட வாய்ப்பு! இது பெண்களுக்கான நீண்ட ஆயுள் டிப்ஸ்

Women Health And Longevity: நீண்ட காலம் வாழ பெண்கள் என்ன செய்ய வேண்டும்? அறிவியல் ஆய்வு சொல்லும் ஆச்சரியம் தரும் ஆயுட்கால ரகசியம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 17, 2022, 03:01 PM IST
  • நீண்ட ஆயுளுடன் வாழ இதை செய்தாப் போதுமா?
  • மரண பயத்திற்கு டாட்டா சொல்ல இதை செய்தால் போதும்
  • பெண்கள் செய்யும் வேலைக்கும் ஆயுட்காலத்திற்கும் உள்ள தொடர்பு
Women Longevity: மரணத்தைத் தள்ளிப்போட வாய்ப்பு! இது பெண்களுக்கான நீண்ட ஆயுள் டிப்ஸ் title=

நியூடெல்லி: பூமியில் வாழும் பலருக்கும் மரணமின்றி சிரஞ்சீவியாக இருக்க ஆசைதான். ஆனால், பூமியில் இருக்கும் எல்லா உயிரினங்களும் மரணத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அறிவியலும், மருத்துவமும் பன்மடங்கு வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும்கூட, யாராலும் மரணத்தை தடுக்கமுடியாது. தள்ளிப்போட வேண்டுமானால் முடியும். ஒருவர் நீண்ட காலம் வாழ வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? தெரிந்தால் எங்களுக்கும் சொல்லுங்கள் என்று சொல்வது கேட்கிறது. இந்த டிஜிட்டல் யுகத்தில், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் ஆயுளை அதிகரிக்க விரும்புகின்றனர். மரண பயம் என்பது அனைவருக்கும் உள்ள நிலையான பயம். மரணம் என்ற ஒன்று இல்லாவிட்டால், மனிதர்களைக் கட்டுபடுத்த முடியாது என்பதும் உண்மை.

நீண்ட ஆயுள் வேண்டும், மரணத்தை தள்ளிப்போடுவது என்பவை அனைவரின் ஆசையாக இருந்தாலும், தனிப்பட்ட ஆரோக்கியத்தைப் புறக்கணிப்பது என்பது அனைவரும் தெரிந்தே செய்யும் தவறு. அதேபோல யாருடைய ஆயுட்காலமும் இவ்வளவுதான் என நம்மால் வரையறுக்க முடியாது. ஒருவர் அதிகபட்சம் எத்தனை ஆண்டுகள் வாழ்வார் என்று வேண்டுமானால் கணிக்கமுடியும், ஒப்பீடுகளுடன் ஒப்பிட்டு அனுமானிக்க முடியும். ஆனால், ஒருவர் எப்போது மரணமடைவார் என்பதை முன்கூட்டியே கணிக்கமுடியாது.

மனிதனின் சராசரி ஆயுட்காலம் என்பது எவ்வளவு? 'நூறு ஆயுசு' என்ற வாழ்த்து இன்று சாத்தியம்தானா? இந்தியாவில் 1960-ம் ஆண்டு வாக்கில், சராசரி ஆயுட்காலம் 40 வயது என்றிருந்தது, இன்று 68 ஆக உயர்ந்துள்ளது.  

மேலும் படிக்க | வெள்ளைப்படுதல் பிரச்சனை: இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்

இதற்கு காரணம், ஊட்டமான உணவு, சுற்றுச்சூழல், பொது சுகாதாரம், மருத்துவ முன்னேற்றம், நோய்களுகளுக்கான தீர்வு, முதியவர்களுக்க்கு சிகிச்சை, நோய்த்தொற்று தடுப்பு, தடுப்பூசிகள், விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்புகள் என பல காரணங்களைச் சொல்லலாம்.
ஆனால், இதையெல்லாம் மீறி பெண்களின் ஆயுட்காலம் என்பது அவர்கள் செய்யும் வேலைகளின் அளவில் தான் இருக்கிறது என்பது தெரியுமா? இது உண்மையில் சத்தியமான சாத்தியம். இதை சொல்வது விஞ்ஞானிகள். 

தனிப்பட்ட ஆரோக்கியத்தைப் புறக்கணிப்பது வாழ்நாளைக் குறைத்துவிடும்

பிஸியான வேலை வாழ்க்கை, அதிகரித்து வரும் பொறுப்புகள் மற்றும் உட்கார்ந்தே வேலை செய்யும் பணிச்சூழல், உடல் உழைப்பு குறைவான வாழ்க்கை முறை ஆகியவை உடல்நலத்தை மட்டுமல்ல, ஒருவரின் ஆயுளையும் குறைக்கும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. சமீபத்திய ஆண்டுகளில், விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் மூலம், மரணத்திற்கும், ஒருவர் செய்யும் வேலைகளின் அளவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | கருவளையங்கள் அழகை கெடுக்கிறதா... மாயமாய் நீக்க ‘சில’ எளிய வீட்டு வைத்தியங்கள்!

உடல் செயல்பாடுகள் பற்றிய அறிவியல் ஆய்வுகள்

கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், 2012 மற்றும் 2020 க்கு இடையில் 63 வயதுக்கு அதிகமான ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் முடிவு, வியப்பை அளித்தன. குறைந்த அளவு உடல் உழைப்பு இருப்பவர்களை விட்ட, மிதமான உடல் உழைப்பு செய்பவர்களின் ஆயுள் அதிகமாக இருந்தது. அதே, அதிக அளவிலான உடல் செயல்பாடுகள் கொண்டவர்களின் ஆயுள் இன்னும் அதிகமாக இருந்தன. 

இந்த ஆய்வு, உடல் உழைப்புக்கும், மரண அபாயக்கும் உள்ள நேரடித் தொடர்பை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆய்வில், பங்கேற்பாளர்களின் தனிப்பட்ட மரபணு முன்கணிப்புகளும் கவனத்தில் கொள்ளப்பட்டது, இது மனித உயிரியல் கலவையின் காரணியாகும், இது மிக சமீபத்தில் வரை மாற்ற முடியாததாகவும் தவிர்க்க முடியாததாகவும் கருதப்பட்டது.

உயிரணுக்களில் உள்ள குறிப்பிட்ட மரபணு கட்டமைப்புகள் சில நோய்களுக்கான முன்கணிப்புடன் இணைக்கப்பட்டுள்ளன மற்றும் உயிரணு வேதியியல் மற்றும் உடலுக்குள் நிகழும் மிகவும் சிக்கலான உயிரியல் செயல்முறைகளைப் புரிந்துகொள்ளப் பயன்படும் ஒரு நபரைப் பற்றிய பிற தகவல்களை வழங்குகின்றன.

மேலும் படிக்க | சிறுநீரக கல் பிரச்சனையை நீங்கள் இப்படியும் தவிர்க்கலாம்!

எலிகளின் இறப்பு தொடர்பான செயல்பாட்டின் விளைவு
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முன்னர் குறிப்பிடப்பட்ட ஆய்வில் இதேபோன்ற தொடர்பை ஒரு அற்புதமான ஆய்வு சுட்டிக்காட்டுகிறது, அங்கு விஞ்ஞானிகள் எலிகளின் சுறுசுறுப்பு, செயல்பாடுகளின் விளைவுகள், அவை நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுக்கு புரியும் எதிர்வினை ஆகியவை ஆயுளுடன் தொடர்புடையவையாக இருந்தன.  

மனிதர்களுக்கும் எலிகளுக்கும் 85% ஒரே மாதிரியான மரபணுக்கள் உள்ளது என்பது ஆச்சரியமானது. எனவே, மனிதர்களுக்கும், எலிகளுக்கும் இடையே ஒரே மாதிரியான உயிரியல் கலவை உள்ளது என்பதும் சுவராசியமான உண்மை.

 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்கணுமா? அப்போ இதை கண்டிப்பா சாப்பிடுங்க! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News