August 04: சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம்
உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,81,17,821; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,90,181; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,07,39,036
புதுடெல்லி: உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,81,17,821; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,90,181; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,07,39,036
இந்தியாவில் இதுவரை மொத்தமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,03,695 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 11,86,203 ஆகவும், பலி எண்ணிக்கை 32,771 ஆகவும் உயர்ந்துவிட்டது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் தமிழகத்தில் 109 பேர் இறந்துள்ளனர். தமிழ்நாட்டில் இறப்பு எண்ணிக்கை இப்போது 4,241 ஐ எட்டியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு, கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டது...
மெல்போர்னில் நோய்த்தொற்றுப் பாதிப்பு கடுமையானதால், அடுத்த ஆறு வாரங்களுக்கு கடைகளை மூட உத்தரவு..
வேல்ஸில் உள்ளூர் வாடிக்கையாளர்களுக்காக மட்டும் கேளிக்கை விடுதிகள் மற்றும் உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன...
வெளியே செல்லும்போது அபாயங்களைக் குறைக்கவும் COVID-19 பரவுவதைத் தடுக்கவும் அனைவரும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பிறரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதிகக் காற்றோட்டமுள்ள வெளிப்புற இடங்கள் அல்லது திறந்த நிலை இடங்களைத் தேர்வு செய்யவும். மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகி இருங்கள் வெளியே பொது இடங்களுக்குச் செல்வது பற்றிய உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.
கொரோனாவுக்கான தமிழக அரசின் பிரத்யேக தொலைபேசி உதவி எண்கள்: 1800 120 555550; 044 – 29510400, 044 – 29510500; 044 – 24300300, 044 – 46274446; 9444340496, 8754448477...
Read Also | COVID-19க்கு சித்த மருத்துவ சிகிச்சை மட்டுமே கொடுக்கும் ஆராய்ச்சி விரைவில் தொடங்கும்
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் பத்து நாடுகள்:
1. அமெரிக்கா - 46,67,955
2. பிரேசில் - 27,33,677
3. இந்தியா - 18,03,695
4. ரஷ்யா - 8,49,277
5. தென்னாப்பிரிக்கா - 5,11,485
6. மெக்சிகோ - 4,39,046
7. பெரு - 4,28,850
8. சிலி - 3,59,731
9. கொலம்பியா - 3,17,651
10. இரான் - 3,09,437