புதுடெல்லி: உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 2,14,71,331; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 7,71,276; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,34,55,530...
இந்தியாவில் இதுவரை மொத்தமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,89,952 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 
18,62,258 ஆகவும், பலி எண்ணிக்கை 49,980 ஆகவும் உயர்ந்துவிட்டது.
தென் கொரியா: ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 279 ஆகப் பதிவு, இதுவே மார்ச் மாதத்திற்குப் பிறகு ஏற்பட்ட உச்சகட்ட பாதிப்பாகும்...
ஆஸ்திரேலியா: விக்டோரியா மாகாணத்தில் செப்டம்பர் 13 வரை அவசரகால நிலை நீட்டிப்பு...
அமெரிக்கா: உமிழ்நீர் அடிப்படையிலான COVID-19 சோதனையை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுமதி...
அல்ஜீரியா: ஐந்து மாதகால ஊரடங்கிற்குப் பிறகு கடற்கரைகள்,சிற்றுண்டி கடைகள் மற்றும் மசூதிகள் மீண்டும் திறப்பு...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Also Read | Corona Vaccine: இந்தியாவில் எங்கே .. எப்போது... என்ன விலை...!!!


ளியே செல்லும்போது அபாயங்களைக் குறைக்கவும் COVID-19 பரவுவதைத் தடுக்கவும் அனைவரும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பிறரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதிகக் காற்றோட்டமுள்ள வெளிப்புற இடங்கள் அல்லது திறந்த நிலை இடங்களைத் தேர்வு செய்யவும். மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகி இருங்கள் வெளியே பொது இடங்களுக்குச் செல்வது பற்றிய உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.


கொரோனாவுக்கான தமிழக அரசின் பிரத்யேக தொலைபேசி உதவி எண்கள்: 1800 120 555550; 044 – 29510400, 044 – 29510500; 044 – 24300300, 044 – 46274446; 9444340496, 8754448477...



கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் பத்து நாடுகள்:
1. அமெரிக்கா - 53,61,165
2. பிரேசில் - 33,17,096
3. இந்தியா - 25,89,952
4. ரஷ்யா - 9,15,808
5. தென்னாப்பிரிக்கா - 5,83,653
6. மெக்சிகோ - 5,17,714
7. பெரு - 5,16,296 
8. கொலம்பியா - 4,56,689
 9. சிலி - 3,83,902
10. ஸ்பெயின் - 3,42,813