சீனாவில் தொடர்ந்து கொரோனா...ஷாங்காயில் தீவிர ஊரடங்கு
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் வர்த்தக நகரான ஷாங்காயின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டரை கோடி மக்கள் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டுள்ளனர்.
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் உலக நாடுகளுக்கும் பரவியது. உலக நாடுகள் கொரோனாவை சமாளிக்க முடியாமல் தடுமாறிய நிலையில், தீவிர ஊரடங்கு விதிகளால் சீனாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது சீனாவுக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. சீனாவின் துறைமுக நகரான ஷாங்காயில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஷாங்காயின் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள 2 கோடியே 60 லட்சம் மக்கள் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டுள்ளனர். இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளால், பீஜிங்கை அடுத்து சீனாவின் முக்கிய வர்த்தக நகரான ஷாங்காயில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சீனா விமானம் விபத்து: விமானம் செங்குத்தாக விழுந்தது ஏன் என குழம்பும் விஞ்ஞானிகள்
புதிய ஊரடங்கு விதிகளின்படி மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் எனவும், குப்பைகளை அகற்ற, நடைப்பயிற்சி மேற்கொள்ள என எந்த காரணத்திற்காகவும் மக்கள் வெளியே வரக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாய்களை நடைப்பயிற்சி அழைத்துச் செல்ல அனுமதி இல்லாததால் ஜன்னல் வழியே நாயைக் கயிறு கட்டி இறக்கி நடைப்பயிற்சி மேற்கொள்ள வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து பிற வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஷாங்காயில் வர்த்தக கண்காட்சிகள் நடத்தப்படும் வர்த்தக மையம் 15 ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சீனா விமான விபத்து: இரு கருப்புப் பெட்டிகளும் மீட்கப்பட்டதாக தகவல்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR