பிரேசிலியா: அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனையின் போது, பரிசோதனையில் உட்பட தானாக முன்வந்து ஒப்புக்கொண்ட ஒரு தன்னார்வலர் உயிர் இழந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும், பரிசோதனை தொடர்ந்து நடக்கும் என பிரேசில் (Brazil) சுகாதார நிறுவனம் Anvisa அறிவித்துள்ளது. இருப்பினும், பரிசோதனையின்போது அந்த நபருக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டதா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


எதுவும் சொல்ல மறுப்பு


மருத்துவ ரகசியத்தன்மைக்கான காரணங்களை சுட்டிக்காட்டி இந்த சம்பவம் குறித்து எதையும் வெளியிட சுகாதார நிறுவனம் என்விசா மறுத்துவிட்டது. COVID-19 தடுப்பு மருந்து (COVID Vaccine) குழு சுயாதீனமாக ஆய்வு செய்யப்பட்டு பரிசீலிக்கப்பட்டதாகவும், அவர்களது தரப்பில் எந்த தவறும் நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.


ALSO READ: தமிழகத்தில் இனி கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்: EPS


தடுப்பு மருந்தின் பரிசோதனையின் போது எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், தற்காப்பு நடவடிக்கைகள் பற்றியோ அல்லது ஏதேனும் தவறுகள் ஏற்பட்டது குறித்தோ பிரேசில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. பரிசோதனை தொடர வேண்டும் என்று பிரேசில் கட்டுப்பாட்டாளர் அமைப்புகள் பரிந்துரைத்துள்ளனர்.


மறுபுறம், லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் (Oxford University) அஸ்ட்ராசெனெகா தடுப்பு மருந்துக்கான சோதனைகள் தொடரும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. அங்கு செய்யப்பட்ட ஒரு சுய மதிப்பாய்வில் எந்தவித தவறுகள் குறித்த தகவல்களும் வெளிவரவில்லை. 


ALSO READ: கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் நோயாளிகளுக்கு புதிய ஆபத்து வரும்..!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR