ஸ்டைலாக ‘தம்’ அடிக்கும் நண்டு..! என்னமா புகை விடுது..! வைரல் வீடியோ!
நண்டு தம் அடிக்கும் வீடியோ வெளிநாட்டில் எடுத்ததல்ல. இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது
பொதுவாக குரங்கு, கரடி எல்லாம் மனிதர்கள் அணைக்காமல் வீசிச் செல்லும் சிகரெட்டை புடிக்கும் வீடியோக்களை பார்த்திருப்போம். ஆனால் இங்கு நண்டு ஒன்று தம் அடிக்கும் வீடியோ ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
35 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில் கடற்கரையில் நண்டு ஒன்று சிகரெட்டை அதன் கொடுக்கில் வைத்து புகைக்கிறது. அதன்பிறகு சிகரெட்டை வாயில் இருந்து எடுத்து புகை விடுகிறது. கேமரா வெளிச்சம் மேலே பட்டதும் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடுகிறது. இந்த வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன் வைரலானது என்றாலும், தற்போது மீண்டும் பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இது இந்தியாவில் எடுக்கப்பட்டது. எந்த ஊர் என்பது தெரியவில்லை.
மேலும் படிக்க | வெடிகுண்டை தண்ணீர் மூலம் செயலிழக்க வைத்த உக்ரைன் வீரர்கள்..! திக் திக் நிமிடங்கள்..!
Caution - புகைப்பிடிப்பது உடலுக்கு கேடு
புகைப்பிடிப்பது மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், புகைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஆனால் புகைத்தபின் கீழே வீசும் சிகரெட்டை அணைத்தால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கலாம். சில சமயங்களில் இதை விலங்குகளும், கடற்கரையில் வாழும் உயிரினங்களும் உட்கொள்ளும் அபாயம் உள்ளதால் மனிதர்கள் திருந்த வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR