அதிர்ச்சி வீடியோ : 1 வயது குழந்தையை அப்படியே முழுங்கிய முதலை... தந்தையும் படுகாயம்!
ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றபோது, 1 வயது குழந்தையை முதலை ஒன்று இழுத்துச்சென்றது அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.
மலேசியா நாட்டில் சபா மாகாணத்தின் லகட் தாட்டு என்ற கடலோர பகுதியில் உள்ள ஆற்றில், தன்னுடைய சிறு படகில் தனது ஒரு வயது மகன் உடன் ஒருவர் மீன்பிடித்து வந்துள்ளார். அப்போது, படகை திடீரென முதலை ஒன்று தாக்கியுள்ளது.
முதலை தாக்குதலின்போது, அந்த இளைஞரும் கடுமையாக போராடியுள்ளார். ஆனால், அவரால் முதலையை தாக்குபிடிக்க முடியவில்லை என தெரிகிறது. தலையில் கடும் பற்தடுங்களுடன் பல்வேறு காயங்களுடன் அவர் ஆற்றில் கவிழ்ந்தார். கரை சேர்ந்த அவரை அப்பகுதியினர் மீட்டனர். ஆனால், அவரின் ஒரு வயது மகனை முதலை ஆற்றின் ஆழமான பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டது. கடைசியாக அந்த முதலை, வாயில் குழந்தையோடு நீருக்கு வெளியே தெரிந்தது அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க | ஜோடியுடன் ஜாலியாக வாழும் உலகின் மிக வயதான ஆமை... எத்தனை வயது தெரியுமா?
இதுகுறித்து லகட் தாட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு முகமையின் தலைவர் சும்ஷோ ரஷீத் கூறுகையில்,"குழந்தையின் தந்தை தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ளார். குழந்தையை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். குழந்தையின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம்" என்றார்.
ராயல் மலேசியன் போலீசாரும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரும் இணைந்து குழந்தையின் உடலை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆட்கொல்லி முதலையின் தாக்குதலை அடுத்து, அக்கம் பக்கம் கிராமத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிராம் மக்கள் பலரும் உணவுக்கும், அடிப்படை தேவைகளுக்கும் ஆற்றையே நம்பியிருப்பதால் அவர்கல் அப்பகுதிக்கு அடிக்கடி செல்ல வேண்டிய தேவையிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், முதலையிடம் சிக்கும் அபாயம் அதிகம் இருப்பதால், தற்போதைக்கு ஆற்றுப்படுக்கைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்டபட்டுள்ளது.
மேலும் படிக்க | பெண்ணை கொன்று சாப்பிட்டு பிரபலமாக மாறிய நபர்... 73 வயதில் உயிரிழந்தார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ