Cyber Attack: கத்தியின்றி ரத்தம் சிந்த வைக்கும் சைபர் தாக்குதல்!
சைபர் தாக்குதலில், ஆயுதங்களை பிரயோகம் செய்யாமல், எதிரி நாட்டு எல்லைக்குள் நுழையாமலேயே எதிரிகளுக்குப் பெரும் சேதம் ஏற்படுத்தும் வலிமை கொண்டது.
அறிவு மற்றும் தொழில்நுட்பம் மனித வாழ்க்கையில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கொண்டு வந்தாலும், அதில் சில ஆபத்துக்களும் உள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணம் உக்ரைனில் நடந்த சைபர் தாக்குதல். ஹேக்கர்கள் உக்ரைனின் கணினி நெட்வொர்க் அமைப்பிற்குள் நுழைந்து வங்கியியல் முதல் அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளைத் ஸ்தம்பிக்க செய்துள்ளனர். இதன் பின்னணியில் ரஷ்யாவின் ஹேக்கர்கள் அல்லது ரஷ்யாவின் சைபர் ராணுவம் இருப்பதாக ஊகிக்கப்பட்டது. இருப்பினும் உக்ரைனில் நடந்த சைபர் மோதலில் எந்த தொடர்பும் இல்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது.
இருப்பினும், இது உக்ரைன் மீது நடத்தப்படும் முதல் சைபர் தாக்குதல் அல்ல. 2014 ஆம் ஆண்டு, ஸ்னேக் அல்லது அரோபோரோஸ் எனப்படும் சைபர் தாக்குதல் உக்ரைன் அரசாங்க அமைப்பிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் ரஷ்யாவின் கைவரிசை இருப்பதற்கான சாத்தியக்கூறும் வெளிப்பட்டது. 2010 ஆம் ஆணு உக்ரைனின் கணினிகளுக்கு பரவத் தொடங்கிய ஸ்னேக் டூல்கிட், 2014ம் ஆண்டு கணினி நெட்வொர்க் சாதனங்கள் மற்றும் கணினி நெட்வொர்க்குகளைத் தாக்கியது. இதில் உக்ரேனிய இராணுவத்தின் ராக்கெட் பிரிவு மற்றும் பீரங்கிகளைத் தாக்கின. இது ஒரு வெற்றிகரமான சைபர் தாக்குதலாக கருதப்படுகிறது.
இஸ்ரேலின் சைபர் இராணுவமும் ஹேக்கிங்கில் நிபுணத்துவம் பெற்றது. 2019ம் ஆண்டு மே 5, அன்று, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் சைபர் தாக்குதல் மூலம் ஒரு கட்டிடத்தை குறிவைத்து தாக்கிய சைபர் ராணுவம் ஹேக்கிங் உதவியுடன் ஒரு கட்டிடத்தில் தங்கள் எதிரிகள் இருப்பதைப் பற்றிய உளவுத்துறை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்தது. சைபர் செக்யூரிட்டி ஸ்குவாட் இந்தத் தகவலை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, சைபர் கவர் மூலம் கட்டிடத்தை இடிக்கும் திட்டத்தை வகுத்தது. இதில் கட்டிடம் முழுவதும் தரைமட்டமானது. இந்த கட்டிடத்தை வெற்றிகரமாக தகர்க்க இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் நிபுணத்துவம் உலகின் சக்திவாய்ந்த நாடுகளை ஆச்சரியப்படுத்தியது.
மேலும் படிக்க | US vs Russia: ரஷ்யா - உக்ரைன் சர்ச்சை! போரைத் தொடங்க படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா?
சைபர் தாக்குதல் இரத்தம் சிந்தமால், எந்த நாட்டு எல்லைக்குள் நுழையாமலேயே எதிரிகளுக்குப் பெரும் சேதம் ஏற்படும். சைபர் தாக்குதலில் முக்கிய தரவுகள் அழிக்கப்படலாம். அனைத்து ஆன்லைன் செயல்பாடுகளையும் ஸ்தம்பிக்க செய்யலாம். மிக கத்தியின்றி ரத்தம் சிந்த வைக்கும் சைபர் தாக்குதலில் இருந்து தப்பிக்க உலகின் 120 நாடுகள் இணைய ராணுவத்தை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் தங்கள் பாதுகாப்பு அமைப்பு, வங்கி அமைப்பு, அரசாங்க நிர்வாக அமைப்பு ஆகியவற்றின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. இந்த 120 நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா, இஸ்ரேல், பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகள் அடங்கும்.
சைபர் ராணுவம், எதிரி நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள், அதன் ராக்கெட்டுகள், ஏவுகணை அமைப்புகள் போன்றவற்றை செயலிழக்கச் செய்யலாம். கணினி நெட்வொர்கை செயலிழக்க செய்து வங்கி மற்றும் அரசு செயல்பாடு மற்றும் நிர்வாகப் பணிகளை ஸ்தம்பிக்க செய்யலாம். தொலைபேசி, தொலைநகல், பிரிண்டர், பேஜர் போன்ற அனைத்து சேவைகளையும் சீர்குலைக்கலாம்.
மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர் மூளுமா; வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எச்சரிக்கை!
சில மாதங்களுக்கு முன், பாலஸ்தீனிய ஆயுதப்படைகள் இஸ்ரேலை ராக்கெட்டுகளால் குண்டுவீசின. இவ்வளவு பெரிய அளவில் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்ட போதிலும் இஸ்ரேலுக்கு சிறு பாதிப்பை கூட ஏற்படுத்த இயலவில்லை. ஏனெனில் இஸ்ரேலின் அயர்ன் டோம் பாதுகாப்பு அமைப்பு, அதிலிருந்து இஸ்ரேலை காத்தது.
இதேபோல், ரஷ்யாவின் S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அல்லது அமெரிக்காவின் பேட்ரியாட் அமைப்பும் மிகவும் மேம்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த அமைப்புகள் அனைத்தும் தானியங்கி கணினிமயமாக்கப்பட்ட அமைப்பு மூலம் இயக்கப்படுகின்றன. சென்சார்கள் மூலம் அந்த பகுதியில் காற்றில் இருந்து பூமிக்கு வரும் எதிரி தாக்குதல்களை கணினி தானாகவே கண்டறியும். அதன் தூரம், வேகம், இலக்கு ஆகியவற்றைக் கணக்கிட்டு கணினிக்கு செய்தியை அனுப்புகிறது. இந்தச் செய்தியைப் பெறும் பாதுகாப்பு அமைப்பு, எதிரியின் நடவடிக்கையை கண்ணிமைக்கும் நேரத்தில் ஒன்றும் இல்லாமல் செய்து விடும். எனவே தான் உலக நாடுகள் பல சைபர் ராணுவத்தை பலப்படுத்தி வருகின்றன.
மேலும் படிக்க | Russia-Ukraine crisis: ரஷ்யா படைகளை வாபஸ் பெறவில்லை என அமெரிக்கா குற்றசாட்டு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR