SARS-CoV-2 vs Guillain-Barre Syndrome: தென்னாப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்காக தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவரின் பதிவு செய்யப்பட்ட மரணம் என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உயிரிழந்தவர், தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர் என்றும், அவர் குய்லின்-பாரே சிண்ட்ரோம் எனப்படும் அரிய நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டவர் என்றும், தென்னாப்பிரிக்காவின் சுகாதார கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. நோயாளியின் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் இடையே தொடர்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்த சுகாதார கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜான்சன் & ஜான்சனின் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திய பிறகு நோயாளி உயிரிழந்தார். இதற்கு காரணம் அவருக்கு இருந்த நரம்பியல் கோளாறு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குய்லின்-பார் சிண்ட்ரோம் ( Guillain-Barre Syndrome) என்பது,நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் நோய் ஆகும். நோயெதிர்ப்பு மண்டலத்தால் ஏற்படும் தசை பலவீனம் ஆகும்.


மேலும் படிக்க | பீதியை கிளப்பும் Omicron BA.4, BA.5; உங்களை காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை


SARS-CoV-2 ஆல், GBS எனப்படும் நரம்பியல் கோளாறு தூண்டப்படலாம் என்பதை இந்த மரணம் உணர்த்தியிருக்கிறது. நரம்புக் கோளாறு உள்ளவர்களுக்கும் தடுப்பூசிகளின் செயல்பாட்டிற்குமான ஆராய்ச்சிகளில் முக்கியமான ஒன்றாக இந்த மரணம் பார்க்கப்படுகிறது.


ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்ட நபர் இறந்ததை, அந்த நிறுவனமும் கவனத்துடன் பரிசீலிக்கிறது. அரிதான நிகழ்வுகளின் அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வை வலுவாக ஆதரிப்பதாக நிறுவனம் கூறியது.


தடுப்பூசி போடப்பட்ட ஆறு வாரங்களில் ஜிபிஎஸ் அபாயம் அதிகமாக இருப்பதாக தரவு பரிந்துரைக்கிறது. எனவே, அமெரிக்க அதிகாரிகள் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி தொடர்பான சாத்தியங்கள் குறித்த எச்சரிக்கையைச் சேர்த்துள்ளனர்.


ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தரவுகளின்படி, தடுப்பூசி பெறுபவர்களில் GBS பாதிப்பு உள்ளவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படும் விகிதம் சற்று அதிகமாக உள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியைப் போலவே, அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட் தடுப்பூசியும் வைரஸ் வெக்டர் தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | Monkeypox: குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது


ஜிபிஎஸ் நோயாளிகளுக்கு, கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் சாத்தியங்கள் அதிகமாக இருப்பதாக, கடந்த ஆண்டு ஐரோப்பாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  


GBS நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பொதுவாக தசை பலவீனத்தினால் ஏற்படும் உணர்வு அல்லது வலி, கால்களிலும் கைகளிலும் தொடங்குகின்றன. இந்த நரம்புக் கோளாறு தீவிரமாகும்போது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட்வர்களுக்கு மூச்சு தசைகளின் பலவீனம் அதிகரிக்கும்.


தன்னியக்க நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களால் பாதிக்கப்படும் குய்லின்-பாரே சிண்ட்ரோம் நோயாளிகள், இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தில் அசாதாரண மாற்றங்களை எதிர்கொள்வார்கள்.  


மேலும் படிக்க | COVID-19: BA.4, BA.5 வகை ஒமிக்ரான் தொற்று பாதிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ