15 இறைச்சி மற்றும் பால் நிறுவனங்களின் மீத்தேன் வெளியேற்றம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்திய ஆராய்ச்சியில், ஐந்து பெரிய இறைச்சி நிறுவனங்கள் மற்றும் பத்து பெரிய பால் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த மீத்தேன் உமிழ்வுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு மீத்தேன் தடயத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது. “இது என் மனதை உலுக்குகிறது” என்று ஐஏடிபியின் ஐரோப்பிய அலுவலகத்தின் இயக்குநர் ஷெஃபாலி ஷர்மா கூறுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலநிலை மாற்றம் வெள்ளம் மற்றும் காட்டுத்தீ போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளால் உலகளவில் அழிவை ஏற்படுத்துகிறது. இப்போது, ​​சமீபத்திய ஆராய்ச்சியில் ஐந்து பெரிய இறைச்சி நிறுவனங்கள் மற்றும் பத்து பெரிய பால் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த மீத்தேன் வெளியேற்றம் சுமார் 12.8 மில்லியன் டன்கள் என தரவுகள் சொல்கின்றன. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு மீத்தேன் தடயத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்ஸ்டிடியூட் ஃபார் அக்ரிகல்ச்சர் அண்ட் டிரேட் பாலிசி (Institute for Agriculture and Trade Policy) வெளியிட்ட ”Emissions Impossible: Methane Edition" என்ற அறிக்கை இதனை தெரிவிக்கிறது. எனவே, உலகளாவிய இறைச்சி மற்றும் பால் நிறுவனங்கள் ஏற்படுத்தும், காலநிலை தாக்கங்களை நிவர்த்தி செய்ய "அவசர மற்றும் லட்சிய" சட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | குஜராத் சட்டமன்றத் தேர்தல் 2022: தேதிகளை அறிவித்தது தேர்தல் ஆணையம்!


COP27 காலநிலை மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்கள் எகிப்தில் கூடியிருக்கும் நிலையில், காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில் இந்த அறிக்கை வந்துள்ளது. இந்த நிறுவனங்களின் கூட்டு மீத்தேன் உமிழ்வு ரஷ்யா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட உலகின் பல பெரிய நாடுகளை விட அதிகமாக உள்ளது என்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.


உலகில், மீத்தேன் வெளியேற்றத்தில் கால்நடைகள் தொடர்பானவை 11.1% ஆகும். அதே நிறுவனங்களின் ஒட்டுமொத்த கிரீன்ஹவுஸ் வாயு (GHG) உமிழ்வுகளுக்கான சமீபத்திய மதிப்பீடுகளையும் இந்த அறிக்கை வழங்குகிறது, இது சுமார் 734 மில்லியன் டன் CO2 க்கு சமமானதாகும் - இது ஜெர்மனி நாட்டின் உமிழ்வை விட அதிகம்.


கால்நடைப் பொருட்களின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றில் தேவையான முறையான மாற்றங்களைத் தீவிரமாகப் பரிசீலிக்காமல், தொழில்நுட்பத் திருத்தங்களுக்கு அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் மட்டுப்படுத்துகின்றன என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.


மேலும் படிக்க | மசூதி மதராசாவுக்கு செல்லும் மோகன் பகவத்! தேர்தல் பராக் பராக்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ