Coronaவை கட்டுப்படுத்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த நாடு எது தெரியுமா?
உலகெங்கிலும் உள்ள நாடுகளில் மீண்டும் Corona உச்சத்தைத் தொட்டு இருப்பதால், புதிய தொற்றுநோயின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது ஒரு நாடு. அந்த நாடு, தென் கொரியா.
உலகெங்கிலும் உள்ள நாடுகளில் மீண்டும் Corona உச்சத்தைத் தொட்டு இருப்பதால், புதிய தொற்றுநோயின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது ஒரு நாடு. அந்த நாடு, தென் கொரியா. அந்நாட்டு அதிகாரிகள் அனைத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடையை அறிவித்தனர். கூடுதலாக, நாடு முழுவதும் இசை நிகழ்ச்சிகளும் நிறுத்தப்படுகின்றன.
அது மட்டுமல்ல, சில பொது உணவு விடுதிகள் மற்றும் கஃபேக்களை மூடும் திட்டத்தையும் தென் கொரிய அதிகாரிகள் வகுத்துள்ளனர்.
COVID-19 நோய்த்தொற்றுகள் ஏற்படத் தொடங்கியதில் இருந்து தென் கொரியாவில் தற்போது தான் மிக விரைவான வேகத்தில் பரவுகிறது. தைவான் மற்றும் நியூசிலாந்து போல, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தென் கொரியாவும் வெற்றிகரமாக இயங்குவதாக முன்னர். ஆனால் புதிய தொற்று வழக்குகள் பதிவானதில் ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதாரமான தென் கொரியாவில் கோவிட்-19 அதிகரிக்கும் என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது.
Read Also | 10 பேரில் 7 பேர் தொடர்ந்து முகமூடி அணிந்தால் கொரோனாவை நிறுத்தலாம்: ஆய்வு
தொடர்ச்சியாக மூன்று நாட்களில் 500 புதிய வழக்குகள் பதிவான பிறகு, ஞாயிற்றுக்கிழமையன்று 450 புதிய வழக்குகள் பதிவாகியிருப்பதாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனத்தால் (Korea Disease Control and Prevention Agency) பதிவாகியுள்ளன.
நாட்டில் COVID-19 இன் “மூன்றாவது அலை” ஏற்பட்டிருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். சமீபத்தில், ராணுவ நிலைகள், ஒரு உணவு விடுதி, தேவாலயங்கள் மற்றும் பள்ளிகளில் கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமையன்று பேசிய தென் கொரிய பிரதமர் சுங் சை-கியூன் (Chung Sye-kyun) சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்று கூறினார். வைரஸ் பரவும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படும் என்று அவர் கூறினார்.
Also Read | இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான Sputnik V தடுப்பூசி தயாரிக்க உள்ளது RDIF, Hetero
தலைநகர் சியோல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஆண்டு இறுதி கொண்டாட்டங்கள் மற்றும் ஹோட்டல்கள், கட்சி அறைகள், விருந்தினர் இல்லங்கள் மற்றும் பிற தங்குமிட வசதிகளில் வழங்கப்படும் விருந்துகள் முற்றிலும் தடை செய்யப்படும்" என்று சுங் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சமூக விலகல் விதிமுறைகளும் மறுசீரமைக்கப்படும் என்பதோடு, பொருளாதாரத்தை சீரமைக்க நாடாளுமன்றத்தில் இருந்து அதிக நிதியைப் பெறுவது தொடர்பாக அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பிரதமர் சுங் கூறினார்.
"மூன்றாவது கொரோனா நெருக்கடியை சமாளிக்க நிதி தேவை... எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்த பிறகு நிதி ஒதுக்கீடு தொடர்பாக அரசு முடிவெடுக்கும்" என்று அவர் கூறினார்.
Also Read | கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் 3 அணிகளுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR