இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான Sputnik V தடுப்பூசி தயாரிக்க உள்ளது RDIF, Hetero ..!!!

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்பூட்னிக் வி உற்பத்தியைத் தொடங்க உத்தேசித்துள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 27, 2020, 03:26 PM IST
  • மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்பூட்னிக் வி உற்பத்தியைத் தொடங்க உத்தேசித்துள்ளன.
  • ஆகஸ்ட் 11 அன்று ரஷ்யா (Russia Corona Vaccine) கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு என்று அறிவித்தது.
இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான Sputnik V தடுப்பூசி தயாரிக்க உள்ளது RDIF, Hetero ..!!! title=

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்பூட்னிக் வி உற்பத்தியைத் தொடங்க உத்தேசித்துள்ளன.

புதுடெல்லி: ரஷ்யாவின் இறையாண்மை நிதியமான  ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (Russian Direct Investment Fund -RDIF) மற்றும் இந்திய மருந்து நிறுவனமான ஹெட்டெரோ (Hetero) ஆகியவை இணைந்து இந்தியாவில் ஸ்பூட்னிக் வி கோவிட் -19 தடுப்பூசியை ஆண்டுக்கு 10 கோடிக்கும் அதிகமான அளவை உற்பத்தி செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக RDIF  ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்பூட்னிக் வி உற்பத்தியைத் தொடங்க உத்தேசித்துள்ளன.

தற்போது, மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை பெலாரஸ், ஐக்கிய அரபு அமீரகம், வெனிசுலா மற்றும் பிற நாடுகளில் நடந்து வருகின்றன. இரண்டாம் கட்ட சோதனைகள் இந்தியாவில் நடைபெற்று வருவதாக ஆர்.டி.ஐ.எஃப் கூறியுள்ளது.

ஆகஸ்ட் 11 அன்று ரஷ்யா (Russia) கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு என்று அறிவித்தது. ஸ்பூட்னிக் வி (Sputnik V) என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியது. இரண்டு மாதங்களாக மேற்கொண்ட மனித பரிசோதனைக்கு பின்னர் ரஷ்யா இந்த தடுப்பூசியை பதிவு செய்தது.

உலக அளவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், தடுப்பூசி ஒன்று தான் இதனை கட்டுப்படுத்தும் ஒரே தீர்வு என அனைவரும் இதை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.

ALSO READ | பிரதமர் மோடி SII-ன் Covishield தயாரிப்பு நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்ய உள்ளார்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News