இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் புனேவுக்கு மோடி சனிக்கிழமை சென்றார். கொரோனா வைரஸ் தடுப்பூசியின் ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள முனேற்றம் மற்றும் உற்பத்தி செயல்முறைகளை அவர் ஆய்வு செய்தார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபடும் மூன்று அணிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வீடியோ கான்பரென்ஸிங் மூலம் பேசுவார். பிரதமர் அலுவலகம் (PMO) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு ட்வீட்டில் இதனை தெரிவித்துள்ளது. ஜெனோவா பயோபார்மா (Gennova Biopharma), பயோலாஜிகல் ஈ (Biological E) மற்றும் டாக்டர் ரெட்டீஸ் (Dr. Reddy’s) ஆகிய மூன்று அணிகளுடன் அவர் ஆலோசனை செய்வார்.
Tomorrow, on 30th November 2020, PM @narendramodi will interact, via video conferencing, with three teams that are involved in developing a COVID-19 vaccine. The teams he will interact with are from Gennova Biopharma, Biological E and Dr. Reddy’s.
— PMO India (@PMOIndia) November 29, 2020
உலக அளவில் கொரோனா பாதிப்பு தொடங்கி ஓராண்டு காலம் ஆகிவிட்டது. லாக்டவுன் கட்டத்தை தாண்டி இப்போது கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி மற்றும் தயாரிக்கும் கட்டத்தில் இருக்கிறோம். நாம் அலட்சியமாக இருந்தால் கொரோனா மிக மிக ஆபத்தானதாக இருக்கும். ஆகையால் கொரோனாவுக்கு (Corona Virus) எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி (PM Narendra Modi) தனது மன் கீ பாத் நிகழ்ச்சியில் மக்களை கேட்டுக் கொண்டார்.
ALSO READ | இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான Sputnik V தடுப்பூசி தயாரிக்க உள்ளது RDIF, Hetero ..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR