ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 2020 ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் ரஷ்ய தலையிடலை தானே மெற்பார்வையிட்டார் என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், புடின் ஒரு 'கொலையாளி' என்று தான் ஒப்புக்கொள்வதாகக் கூறியுள்ளார். 
"இதற்கு அவர் பதிலளிக்க வேண்டி இருக்கும். அதை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள்" என்று பைடன் சர்வதேச ஊடக நிறுவனமான ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"எனக்கு அவரை [புடின்] நன்றாகத் தெரியும்” என்று பைடன் கூறினார். ஜனவரி 2021 இல் புடினுடனான தனது உரையாடலை அவர் நினைவு கூர்ந்தார். "எனது அனுபவத்தில் வெளிநாட்டுத் தலைவர்களுடன் நான் பழகிய வரை, நான் கவனம் செலுத்திய முக்கிய விஷயம் அவர்களைத் தெரிந்துகொள்வதுதான்” என்று பைடன் மேலும் தெரிவித்தார். 


ரஷ்ய (Russia) அதிபர் ஒரு கொலையாளி என பைடன் நினைக்கிறாரா என கேட்கப்பட்டதற்கு, பைடன், ‘ஆமாம்’ என பதில் அளித்தார். 


ALSO READ: Crime: அட்லாண்டாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி, ஒருவர் காயம்


டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக 2020 ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பைடனின் (Joe Biden) வாய்ப்புகளை நாசமாக்குவதற்கான முயற்சிகளுக்கு ரஷ்ய அதிபர் ஊக்கமளித்திருக்கலாம் என்று தேசிய புலனாய்வு இயக்குநர் அலுவலகம் செவ்வாயன்று வெளியிட்ட 15 பக்க அறிக்கையின் பின்னர் இந்த பைடனின் இந்த அறிக்கை வந்துள்ளது.


"ஆண்ட்ரி டெர்காக்கின் நடவடிக்கைகள் குறித்து புடினுக்கு ஒரு உள்நோக்கம் இருந்தது" என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. "மற்ற மூத்த அதிகாரிகளும் அமெரிக்க தேர்தல் நடவடிக்கைகளில் தாக்கம் ஏற்படுத்தும் முயற்சிகளில் பங்கு கொண்டனர். மூத்த தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளும் இதில் அடங்குவர். குறைந்தபட்சம் புடினின் மறைவான ஒப்புதல் இல்லாமல் இந்த நடவடிக்கைகள் நடந்திருக்க முடியாது. 


இருப்பினும், இந்த கூற்றுக்கள் ரஷ்யாவால் நிராகரிக்கப்பட்டன. "அமெரிக்க உளவுத்துறை தயாரித்த ஆவணம், அமெரிக்க உள்நாட்டு அரசியல் செயல்முறைகளில் தலையிடுவதாக எங்கள் நாட்டின் மீது போடப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் மற்றொரு தொகுப்பாகும். அமெரிக்காவின் (America) தேர்தல் செயல்முறைகளில் தாக்கம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ரஷ்யா ஈடுபட்டதாக அமெரிக்க உளவு நிறுவனங்கள் மட்டுமே கூறுகின்றன. இதுபோன்ற கூற்றுக்களுக்கு எந்த வித ஆதாரங்களும் வழங்கப்படவில்லை "என்று வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.


பைடனின் கூற்றுக்குப் பின்னர், ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபை புடினை ஒரு கொலையாளி என்று ஒப்புக் கொண்டதற்காக அமெரிக்க அதிபரைக் கண்டித்தது. புடின் மீதான தாக்குதல்கள் ரஷ்யா மீதான தாக்குதல்கள் போன்றது என்று கூறிய சபாநாயகர் ஸ்டேட் டுமா பேச்சாளர் வியாசெஸ்லாவ் வோலோடின் தனது டெலிகிராம் சேனலில் "பைடன் தனது அறிக்கையால் நம் நாட்டின் குடிமக்களை அவமதித்துள்ளார்" என்று எழுதினார்.


ALSO READ: Coronavirus: தடுப்பூசி மீது புகார்! இந்த தடுப்பூசிக்கு 5 நாடுகள் தடை விதிப்பு!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR