QUAD Summit 2021: அமெரிக்க கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியாவில் தயாரிக்க முடிவு

நான்கு நாடுகளுக்கும் பயன்படும் வகையில், அமெரிக்க கொரோனா  தடுப்பு மருந்துகளை இந்தியாவில் தயாரிப்பது என முடிவெடுக்கப்பட்டது. 

Last Updated : Mar 12, 2021, 11:17 PM IST
  • நான்கு நாடுகளுக்கும் பயன்படும் வகையில், அமெரிக்க கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியாவில் தயாரிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
  • வசுதைவ குடும்பகம் என்னும் தத்துவத்தின் அடிப்படையில் நேர்மறையான அணுகுமுறையை இந்தியா கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
  • ஜோ பைடன், 'குவாட்' இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்புக்கான ஒரு முக்கிய தளமாக இருக்கும் என்று கூறினார்
QUAD Summit 2021: அமெரிக்க கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியாவில் தயாரிக்க முடிவு  title=

QUAD உச்சி மாநாடு 2021: கோவிட் -19 தொற்றுநோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உறுப்பினர்களுடன் குவாட் குழுமத்தின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை உச்சி மாநாட்டில் சந்தித்து, இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு பாதுகாப்பான, மலிவான தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது குறித்து ஆலோசனை செய்தனர்.
நான்கு நாடுகளுக்கும் பயன்படும் வகையில், அமெரிக்க கொரோனா  தடுப்பு மருந்துகளை இந்தியாவில் தயாரிப்பது என முடிவெடுக்கப்பட்டது. 

உலகத்தின் தேவைகளுக்கு சீனாவை சார்ந்திருக்கும் நிலையை மாற்றுவது, சீனாவின் அட்டகாசத்தை ஒடுக்குவது,  ஆகியவை இந்த உச்சி மாநாட்டின் முக்கிய நோக்கம் ஆகும். 

பிரதமர் நரேந்திர மோடி, 'குவாட்' உச்சி மாநாட்டில், "ஜனநாயக விழுமியங்கள், மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான உறுதிப்பாட்டிற்காகவும் ஒன்றுபட்டுள்ளோம்" என்று கூறினார். உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதும் இந்தியாவின் வசுதைவ குடும்பகம் என்னும் தத்துவத்தின் அடிப்படையில் நேர்மறையான அணுகுமுறையை இந்தியா கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

ALSO READ | QUAD உச்சி மாநாடு: சீனாவை தனிமைப்படுத்த வியூகம் அமைக்கப்படுமா..!!

பரஸ்பர நலன் மற்றும் பாதுகாப்பான, நிலையான, வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை முன்னேற்றுவதற்கு முன்பை விட மிக நெருக்கமாக இணைந்து செயல்படுவோம் என்று பிரதமர் மோடி கூறினார். இப்போது பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையின் முக்கியமான தூணாக இருக்கும் என்பதை இன்றைய குவாட் உச்சி மாநாடு எடுத்து காட்டுகிறது என்று அவர் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், 'குவாட்' இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்புக்கான ஒரு முக்கிய தளமாக இருக்கும் என்று கூறினார்.
https://zeenews.india.com/tamil/world/president-joe-biden-introduced-us-...
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா https://zeenews.india.com/tamil/technology/australia-passes-law-now-goog... ஆகிய நான்கு நாடுகள் இணைந்து  குவாட் (QUAD)என்னும் கூட்டணியை அமைத்துள்ளது இந்த நான்கு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முதல் உச்சிமாநாடு இன்று இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெற்றது

பிரதமர் நரேந்திர மோடி ( PM Narendra Modi), அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden), ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா (Yoshihide Suga) ஆகியோர் இன்று "குவாட்" நாடுகளின் தலைவர்களின் முதல் கூட்டத்தில் பங்கேற்றனர். 

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் (Joe Biden), பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபரும் சந்திக்கும் முதல் ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். 

QUAD க்கு சீனாவின் எச்சரிக்கையாக பதில் அனுப்பியுள்ளது. QUAD உச்சிமாநாடு நாடுகளுக்கிடையேயான பரிமாற்றங்களும் ஒத்துழைப்பும் பரஸ்பர புரிதலின் அடிப்படையில் இருக்க வேண்டும், மூன்றாம் தரப்பினரை 'குறிவைக்கக் கூடாது'. குவாட் ஒரு சிறப்புக் குழுவை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று சீனா கூறியது.

ALSO READ | கூகிள், பேஸ்புக், ட்விட்டர் மீது ரஷ்யா வழக்கு பதிவு; காரணம் என்ன..!!

குவாட் என்றால் என்ன (QUAD)
இதன் பொருள் 'நாற்புற பாதுகாப்பு உரையாடல்'. இது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பலதரப்பு ஒப்பந்தமாகும். 2007 ஆம் ஆண்டில், ஜப்பானின் அப்போதைய பிரதமர் ஷின்சோ அபே QUAD ஐ முன்மொழிந்தார். இந்த திட்டத்தை இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆதரித்தன. 2019 ஆம் ஆண்டில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்தனர். இதன் பின்னர், நான்கு நாடுகளின் உயர்மட்ட தலைவர்களுக்கிடையில் முதல் உச்சிமாநாடு வெள்ளிக்கிழமை மெய்நிகர் மாநாடாக ஏற்பாடு செய்யப்பட்டது.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News