பியாங்யாங்: எட்டு ரஷ்ய தூதாண்மை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், பியோங்யாங்கின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக, கையால் தள்ளப்பட்ட ரயில் தள்ளுவண்டியில் வட கொரியாவை விட்டுச் சென்றனர். இவர்களில் ஒரு மூன்று வயது சிறுமியும் இருந்தார்.
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட வீடியோவில், பெண்கள் அமர்ந்துள்ள, சூட்கேஸ்கள் ஏற்றப்பட்டுள்ள ஒரு தள்ளுவண்டியை எல்லை ரயில்வே பாலத்தின் குறுக்கே ரஷ்ய மூன்றாம் செயலாளர் விளாடிஸ்லாவ் சொரோகின் தள்ளுவதைக் காண முடிகிறது.
இவர்களது பயணம் பியோங்யாங்கிலிருந்து (Pyongyang) 32 மணி நேர ரயில் பயணத்துடன் தொடங்கியது. பின்னர் இரண்டு மணி நேரம் பேருந்தில் பயணித்து எல்லையை அடைந்தனர். தங்கள் தாயகத்தை நோக்கி செல்வதால் மகிழ்ச்சியில் இருந்த குழு மகிழ்ச்சியுடன் கை அசைப்பதையும் காண முடிந்தது.
"தாயகம் செல்வதற்கான இந்த பயணம் நீண்ட மற்றும் கடினமான பயணமாக இருந்தது” என்று வியாழக்கிழமை பிற்பகுதியில் கூறிய அமைச்சகம், அந்த தள்ளுவண்டியில் குழு எப்படி தங்கள் பயணத்தை மேற்கொண்டது என்பதையும் விவரித்தது.
"இறுதியாக, பயணத்தின் மிக முக்கியமான பகுதி - ரஷ்ய பக்கத்திற்கு கால்நடையாக நடந்து செல்வது” என்று அந்த செய்தியில் கூறப்பட்டது.
குழுவில் இருந்த ஒரே ஆணான சொரோகின், தள்ளுவண்டியின் எஞ்சினாக செயல்பட்டார். அவர் ஒரு கிலோமீட்டருக்கும் மேல் அந்த தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு வந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
ரஷ்ய (Russia) எல்லைக்குள் வந்தவுடன், அவர்களை சந்தித்த வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் அவர்களை பேருந்து மூலம் விளாடிவோஸ்டாக் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ALSO READ: முதன் முறையாக தவறை ஒப்புக்கொண்ட Kim Jong Un: North Korea-வில் மாறுகிறதா சூழல்?
அண்டை நாடான சீனாவில் முதன்முதலில் உருவாகி பின்னர் உலகத்தையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் (Coronavirus) தங்கள் நட்டில் பரவாமல் இருக்க, வட கொரியா கடந்த ஆண்டு ஜனவரியில் எல்லையில் கடுமையான தடைகளை விதித்தது.
அணு ஆயுதங்கள், பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட வட கொரியா அனைத்து விமான போக்குவரத்தையும் தடை செய்தது.
ஊழியர்கள் மற்றும் பொருட்கள் நுழைய முடியாத நிலையில், இந்த கட்டுப்பாடுகள் தூதாண்மை அதிகாரிகள் மற்றும் உதவித் தொழிலாளர்களின் நடவடிக்கைகளுக்கு கடுமையாகத் தடையாக இருந்தது. பல மேற்கத்திய தூதரகங்கள் தங்கள் முழு ஊழியர்களையும் வட கொரியாவிலிருந்து திரும்ப அழைத்தன.
ஆனால் ரஷ்யா வட கொரியாவோடு நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. மற்றும் அங்கு குறிப்பிடத்தக்க தூதாண்மை இருப்பையும் ரஷ்யா பேணுகிறது.
வட கொரிய தலைமைத்துவ வளாகத்திற்கு அருகில் மத்திய பியோங்யாங்கில் ஒரு பிரதான இடத்தில் மாஸ்கோ இன்னும் ஒரு பெரிய தூதரகத்தைக் கொண்டுள்ளது.
தள்ளுவண்டியில் புறப்பட்ட குழு தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.
தற்போது தள்ளுவண்டி மூலம் பயணம் செய்துள்ள ரஷ்ய குழு தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்ட குழுவாகும்.
இந்த ரஷ்ய குழு நாடு திரும்பிய வினோத விதத்தை தென் கொரியாவில் ஆன்லைனில் மக்கள் மகிழ்ச்சியுடனும் கேலி கிண்டல்களுடனும் ரசித்து வருகின்றனர். "நான் வட கொரியாவில் பிறக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று ஒருவர் தென் கொரியாவின் மிகப்பெரிய இணையதளமான நாவரில் கூறினார்.
மற்றொருவர் கேலியாக, "அந்த தள்ளுவண்டியை தயவு செய்து எடுத்த இடத்தில் வைத்து விடவும்” எனகூறினார்.
ALSO READ: அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் இணைந்து செயல்பட விரும்பும் கிம் ஜாங்-உன்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR