தாலிபன் அமைப்பினரடன் மேற்கொள்ளப்பட இருந்த அமைதி உடன்படிக்கை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்கான் அதிபர் மற்றும் முக்கியமான தாலிபன் தலைவர்கள் தனித்தனியாக ரகசியமாக அமெரிக்கா வரவழைக்கப்ட்டு தம்மை சந்திக்க இருந்த நிலையில், காபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒரு அமெரிக்க வீரரும், 11 அப்பாவி மக்களும் கொல்லப்பட்டதால் அமைதிப் பேச்சுவார்த்தையை தாம் ரத்து செய்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சந்திப்பை ரத்து செய்த டிரம்ப், அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்தும் விலகியுள்ளார்.


கடந்த வியாழனன்று நடைப்பெற்ற அந்தத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை அடுத்து அதிபர் டிரம்ப் இந்த அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.



வளைகுடா மாநிலமான கட்டாரில் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் தலிபான் பிரதிநிதிகள் இடையே ஒன்பது சுற்று சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.


அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறுவதற்கு ஈடாக, அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் தாக்க முற்படும் போர்க்குணமிக்க குழுக்களுக்கான தளமாக ஆப்கானிஸ்தான் மீண்டும் பயன்படுத்தப்படாது என்பதை தலிபான் உறுதி அளித்தது. அதன் பேரில் 20 வாரங்களுக்குள் 5,400 படையினரை திரும்பப்பெற்றுக்கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டிருந்தது.


அதாவது., ஆப்கானிஸ்தானில் தற்போது சுமார் 14,000 அமெரிக்கப் படையினர் உள்ளனர். தாலிபன் அமைப்புடன் செய்துகொள்ள முன்மொழியப்பட்டிருந்த ஒப்பந்தத்தின்படி 20 வாரங்களுக்குள் 5,400 படையினரை திரும்பப்பெற்றுக்கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டிருந்தது.


தாலிபன் கட்டுப்பாட்டில் இருந்த அரசுக்கு எதிராக 2001-ல் ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா படையெடுப்பு நடத்தியபின் சர்வதேச நாடுகளின் ராணுவ வீரர்கள் மட்டும் சுமார் 3,500 பேர் அங்கு இறந்துள்ளனர். அவர்களில் 2,300 பேர் அமெரிக்கர்கள்.


2019 பிப்ரவரியில் வெளியான ஐ.நா தரவுகளின்படி 32,000க்கும் மேலான குடிமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.