கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்பின் உடல் நிலை அடுத்த 48 மணி நேரத்தில் எப்படி மாறும் என்பது மிக முக்கியமானது என்று வெள்ளை மளிகை வட்டாரங்கள் தெரிவித்தன..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடை பெற உள்ள நிலையில் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா நோய் தொற்று தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது.


தொடர்ந்து காய்ச்சல் உள்ளிட்ட கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் இருப்பதால் மேல்சிகிச்சைக்காக அவர் அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரெட் தேசிய ராணுவ மருத்துவமனையில் அதிபர் ட்ரம்ப் நேற்று அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்ந்த பிறகு, டிரம்பின் உடல் நிலை சீராக இருப்பதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையை அடைந்ததும், டுவிட்டரில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.


அதிக உடல் எடை வயது மூப்பு போன்ற பிரச்சினைகள் உள்ள ட்ரம்ப்புக்கு கொரோனா நோய் தொற்றும் ஏற்பட்டு உள்ளது. இதனால் இவர் உயர் ரிஸ்க் பிரிவின் கீழ் வருகிறார். எனவே லேசான அறிகுறிகள் மேலும் தீவிரம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் ட்ரம்புக்கு ஆன்டிபாடிகளுக்கான ஊசி மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்திய நேரப்படி சனிக்கிமை காலை 9 மணியளவில் ட்ரம்ப் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டு இருக்கிறது. அப்படித்தான் நான் நினைக்கிறேன். எல்லோருக்கும் நன்றி. அன்புடன். என்று கூறியிருந்தார்.


ALSO READ | Hathras Case: தலித் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை CBI விசாரிக்க CM யோகி உத்தரவு!!


இதனிடையே டிரம்பின் இதய துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் வெப்பநிலை போன்றவை குறித்து மருத்துவர் டாக்டர் சீன் கான்லி கூறகையில் “டிரம்பின் இதயத் துடிப்பு 70, 80 களில் உள்ளது. அவரது இரத்த அழுத்தம் இயல்பான நிலையில் உள்ளது, எனவே அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அவரது இதய செயல்பாடு, சிறுநீரக செயல்பாடு, கல்லீரல் செயல்பாடு ஆகியவற்றை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.- இவை அனைத்தும் இயல்பாக இருக்கிறது. டிரம்ப் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்” என்றார்.



எனினும் அடுத்த 48 மணி நேரத்தில் டிரம்பின் உடல்நிலையில் ஏற்பட போகும் மாற்றங்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அவரது உயிரணுக்களை கடந்த 24 மணி நேரமாக எப்படி இருந்தது என்பதை கண்காணித்து வரும் மருத்துவர்கள். அடுத்த 48 மணி நேரத்தில் ஏதேனும் மாற்றங்கள் உடலில் ஏற்பட்டால் அதற்கு தகுந்தார் போல் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளார்கள். கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அடுத்தடுத்த நாளில் தான் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும் என்பதால் மருததுவர்கள் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த தகவலை வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.