அமெரிக்காவில் 'எலக்டோரல் காலேஜ்' வாக்குகள் எனப்படும் வாக்காளர் தொகுதிகளில் ஒருவர் எத்தனை தொகுதிகளை கைப்பற்றுகிறார் என்பதை வைத்தே அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு மாகாணத்திலும் மக்கள் தொகைக்கு ஏற்ப, குறிப்பிட்ட எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களைப் இருப்பார்கள். மொத்தம் உள்ள 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகளில், 270 அல்லது அதற்கும் மேலான உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறும் வேட்பாளர்தான் அமெரிக்காவின் (America) அதிபராவார்.


டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இதுவரை தனது தோல்வியை முழுமையாக ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டார். இந்த வார தொடக்கத்தில், தனது சொந்த குடியரசுக் கட்சியினரிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக, ஆட்சி மாற்றம் தொடர்பான செயல்முறை அதிகாரப்பூர்வமாக தொடர அனுமதி வழங்கினார். 


தேர்தலில் மோசடி நடந்தததாக வழக்கு தொடர்ந்து, அதன் மூலம் ஆட்சி மாற்றத்தை தடுக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன.


ALSO READ | மவுனம் கலைத்த சீனா... ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜி ஜின்பிங்..!!!


வியாழக்கிழமை  டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார்.  நவம்பர் 3 ஆம் தேதிக்குப் பின்னர் டிரம்ப் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது இதுவே முதல் முறை. அப்போது அவர்கள், நீங்கள் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், "நிச்சயமாக நான் வெளியேறுவேன், அது உங்களுக்குத் தெரியும், ஆனால், அதற்கு  ​​'எலக்டோரல் காலேஜ்' வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருக்க வேண்டும் என்று கேட்டார்.


அதாவது, ஜோ பைடன் (Joe Biden) 'எலக்டோரல் காலேஜ்' வாக்குகளை வென்றால் தான் வெள்ளை மாளிகையை விட்டு செல்வேன் என ட்ரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்.


"தேர்தலில் பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதை நாங்கள் அறிவோம்" என்பதால் தான் தோல்வியை ஒப்புக்கொள்வது கடினம் என்றும் அவர் கூறினார்.


டிரம்பின் 232  எலக்டோரல் காலேஜ் வாக்குகளை பெற்ற நிலையில், 306  எலக்டோரல் காலேஜ் வாக்குகளுடன் பிடென் வெற்றி பெற்றார் - தேவையான 270 என்ற எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் வாக்குகளை ஜோ பைடன் பெற்றுள்ளார். முடிவை முறைப்படுத்த வாக்காளர்கள் டிசம்பர் 14 அன்று சந்திக்க உள்ளனர். பாப்புலர் வாக்கு எண்ணிக்கையில் டிரம்பை 6 மில்லியனுக்கும் அதிகமாக ஜோ பைடன் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இரண்டு குடியரசுக் கட்சியின் அமெரிக்க செனட் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வதற்காக டிசம்பர் 5 ம் தேதி ஜார்ஜியாவுக்குச் செல்வதாக டிரம்ப் வியாழக்கிழமை கூறினார்.


ஜனவரி 5 ம் தேதி ஜார்ஜியாவில் நடைபெறும் இரண்டு ரன் ஆஃப் தேர்தல்களும் குடியரசுக் கட்சியினருக்கு செனட்டில் பெரும்பான்மை உள்ளதா என்பதை தீர்மானிக்கும்.


போட்டி இன்னும் முடியவில்லை என்பதால், ஆதரவாளர்களிடம் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என ட்ரம் கேட்டுக் கொண்டுள்ளார்.


ALSO READ | அமெரிக்காவில் தொடங்கப்பட்டது சத்குருவின் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் ..!!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR