காத்மாண்டு: "ஆதிபுருஷ்" படத்தில் "ஆட்சேபனைக்குரிய" வார்த்தைகள் மற்றும் சீதையின் சித்தரிப்பு காரணமாக நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை முதல் அனைத்து ஹிந்திப் படங்களையும் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். காத்மாண்டு மேயர் பாலேந்திர ஷா, காத்மாண்டு பெருநகர மாநகராட்சி பகுதியில் (KMC) அனைத்து ஹிந்தி படங்களுக்கும் தடை விதிக்கும் முடிவை  அறிவித்து, குறிப்பிட்ட ஒரு உரையாடலை நீக்காமல் 'ஆதிபுருஷ்' திரைப்படத்தை திரையிடுவது 'சரிசெய்ய முடியாத சேதத்தை' ஏற்படுத்தும் என்று கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதிபுருஷ் திரைபடத்தின் சர்ச்சைக்குரிய வசனம்


ஷா தனது முகநூல் பதிவில், "ஆதிபுருஷ்' படத்தின் வசனங்களில் உள்ள ஆட்சேபனைக்குரிய வார்த்தைகள் இன்னும் நீக்கப்படாததால், ஜூன் 19 திங்கள் முதல் அனைத்து ஹிந்திப் படங்களையும் காத்மாண்டு மாநகரப் பகுதியில் திரையிட தடை விதிக்கப்படும். “சீதை பாரத மண்ணின் புதல்வி” என்ற ஆட்சேபனைக்குரிய வசனத்தை படத்தில் இருந்து மூன்று நாட்களுக்குள் நீக்க வேண்டும் என்று மூன்று நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்,” என்றார். நேபாளம் சீதை தனது நாட்டின் மகள் என கூறி வருவதால், இந்த வசனம் அதற்கு மாறாக உள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 


அனைத்து இந்திய திரைப்படங்களின் திரையிடல் ரத்து


சர்ச்சைக்குரிய வசனத்தை கொண்ட படத்தை திரையிட அனுமதித்தால், நேபாளம் தேசியம், கலாச்சார ஒற்றுமைக்கு சீர்படுத்த முடியாத சேதம் ஏற்படும் என்றார். தலைநகரில் உள்ள 17 திரையரங்குகளிலும் தற்போது திரையிடப்படும் அனைத்து ஹிந்திப் படங்களின் திரையிடலை தடை செய்வதில் ஷா உறுதியாக உள்ளார். இது குறித்து காத்மாண்டு பெருநகர மாநகராட்சி செய்தித் தொடர்பாளர் நவீன் மானந்தர் கூறுகையில், “KMC வெளியிட்ட அறிவுறுத்தல்களின்படி, காத்மாண்டுவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திங்கள்கிழமை முதல் இந்திய திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படாது.


மேலும் படிக்க |  ‘ஆதிபுருஷ்’ படத்தை பார்க்க திரையரங்கிற்குள் வந்த குரங்கு: வீடியோ வைரல்


நேபாளி படங்கள் மட்டுமே காண்பிக்கப்படும்


"நாங்கள் ஏற்கனவே காத்மாண்டுவில் உள்ள திரையரங்கு உரிமையாளர்களிடம் ஒத்துழைப்பு வழங்குமாறு பேசியுள்ளோம், மேலும் அவர்கள் திங்கள்கிழமை முதல் காத்மாண்டுவில் உள்ள திரையரங்குகளில் ஹிந்தி திரைப்படங்களை திரையிடுவதை தானாக முன்வந்து நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்," என்று அவர் கூறினார். திங்கட்கிழமை முதல் திரையரங்குகளில் ஹிந்திப் படங்களுக்குப் பதிலாக நேபாளி படங்களைக் காட்டலாம் என்றார். இந்தியா முழுவதும் வெள்ளிக்கிழமை வெளியானது 'ஆதிபுருஷ்' திரைப்படம். இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் மாதா சீதையாகவும், சைஃப் அலி கான் லங்காபதி ராவணனாகவும் நடித்துள்ளனர். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் 'ஆதிபுருஷ்' வெளியாகியுள்ளது.


500 கோடி பட்ஜெட்டில் உருவான படம்


3D தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் ஆறு மாதங்களுக்கு முன்னரே வெளியாகி கடுமையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு படத்தின் VFX காட்சியை சரிசெய்து படத்தை தாமதமாகவே தற்போது வெளியிட்டுள்ளனர். 


மேலும் படிக்க | பிரபல ராப் பாடகர் மேடையில் மயங்கி விழுந்து மர்ம மரணம்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ