இலங்கையில், அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே உணவு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவுத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை அடுத்து, அரிசி, சர்க்கரை, போன்ற உணவுப்பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது, இலங்கையின் மொத்த அந்நிய செல்வாணி 2.5 பில்லியன் டாலராக மட்டுமே இருக்கிறது. அதாவது இந்திய பண மதிப்பிலே 20,000 கோடி ரூபாய் மட்டுமே. 


இலங்கையில், (Sri Lanka) உணவு பொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அரிசி சர்க்கரை போன்ற அத்தியாவசிய உணவு பொருட்கள் பதுக்கப்பட்டுவதை தடுக்க கடும் கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 


இருப்பினும் அங்கு உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடைகளுக்கு வெளியே மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கொண்டு பொருட்களை வாங்க காத்துக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. 


ALSO READ | உதவிக்கரம் நீட்டும் இந்தியா: கோவிட்-19 நிவாரணத்திற்காக இலங்கையுடன் Currency Swap!!


2016 ஆம் ஆண்டில் ஒரு அமெரிக்க டாலர் 140 இலங்கை ருபாய்களாக இருந்த, டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு, தற்போது ஒரு அமெரிக்க டாலர் 210 இலங்கை ருபாய் என்ற அளவில் இருக்கிறது. 


இந்த நிலை நீடித்தால் பெட்ரோல், டீசல் போன்றவற்றை, திறந்த சந்தையில் அல்லாமல்,  ரேஷனிலே தான் கொடுக்கவேண்டும் என்ற நிலை ஏற்படலாம் என அரசு சொல்கிறது. 
தொற்றுநோயால் 2020 ஆம் ஆண்டில் பொருளாதாரம் 3.6 சதவிகிதம் சரிந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அரசாங்கம் அந்நிய செலாவணியை காப்பாற்றும் முயற்சியில் உள்ளூர் சமையல் எண்ணெய்,  மஞ்சள் போன்ற உணவு பொருட்கள், வாகனங்கள் மற்றும் பிற பொருட்களை இறக்குமதி செய்வதை தடை செய்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, இலங்கை மத்திய வங்கி உள்ளூர் நாணய மதிப்பை உயர்த்துவதற்காக வட்டி விகிதங்களை அதிகரித்தது.


முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், இலங்கைக்கு கொரொனா (Corona Virus) காரணமாக  நெருக்கடி ஏற்பட்ட போது,  இந்தியா, இலங்கையுடன் Currency Swap எனப்படும் நாணய மாற்ற முறையில், இலங்கைக்கு உதவியது.  இலங்கை இந்திய ரிசர்வ் வங்கியுடன் (RBI) 400 மில்லியன் டாலர் நாணய இடமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கோவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில், தங்களது குறுகிய கால சர்வதேச பணப்புழக்கத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, இலங்கைக்கு (Sri Lanka) இந்தியா இந்த உதவியை செய்தது.


ALSO READ | வரி செலுத்துவோருக்கு அதிர்ச்சி தகவல்! IT ரீபண்ட் கிடைப்பதில் தாமதம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR