இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு...!
இந்தோனேஷியாவில் சும்பாவா மண்டலம் பகுதி ஹிட்-ல் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு...!
இந்தோனேஷியாவில் சும்பாவா மண்டலம் பகுதி ஹிட்-ல் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு...!
இந்தோனேஷியாவில் சும்பாவா மண்டலம் பகுதி ஹிட்-ல் இன்று காலை சரியாக காலை 9:40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கதால் சேதம் அதிகளவில் இருக்கக் கூடும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு பின்னரும் நில அதிர்வு இருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். ANI தகவலின் படி, ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆகப் பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதே மாதத்தில், கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி இந்தோனேசியாவின் முக்கியச் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான லாம்பாக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 82 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது...!