World Bizarre News: கடந்த காலங்களில் அரசியல் தலைவர்கள் அளவுக்கு சினிமா பிரபலங்களும், விளையாட்டு வீரர்களுமே பிரபலமானவர்களாக இருப்பார்கள். அதற்கு முக்கிய காரணம் பெரும்பாலான மக்கள் பார்க்கக்கூடிய திரைப்படங்களிலும், விளையாட்டிகளிலும் நட்சத்திரங்களாக ஒளிக்கூடியவர்களாக இருந்ததால் அத்தகைய செல்வாக்கு அவர்களுக்கு கிடைத்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், இந்த காலகட்டத்தில் பேஸ்புக், ட்விட்டர், யூ-ட்யூப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றிலும் பிரபலங்களங்களாக அறியப்படுபவர்களுக்கும் அபரிமிதமான செல்வாக்கு கிடைக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சமூக வலைதளங்களில் அடித்தட்டு மக்களில் இருந்து இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரிடமும் அறிமுகமாகியிருப்பதால் அவர்களுக்கும் சினிமா பிரபலங்கள் அளவிற்கு தற்போது வரவேற்பு கிடைக்கிறது. இது இந்தியாவில் என்றில்லை உலகம் முழுவதும் இதே நிலைதான். 


மாடல் அழகி கொடூர கொலை


முன்பெல்லாம், சினிமா ரசிகர்களுக்கே அரசியல் அளவிலும் தொடர்பிருக்கும், அதிகாரத்திற்கும் நெருக்கமாகவும் இருப்பார்கள். அதே அளவு தற்போது சமூக வலைதள பிரபலங்களுக்கும் உள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. அந்த வகையில், ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த லாண்டி பராகா கோய்புரோ என்ற பெண்மணியும் சமூக வலைதள பிரபலமாக அறியப்பட்டவர். ஈக்வடார் நாட்டின் மாடல் அழகியான இவருக்கு இன்ஸ்டாகிராமில் 1 லட்சத்து 73 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.


மேலும் படிக்க | 11 வயது மாணவனுடன் முறையற்ற உறவு... ஆசிரியையின் அத்துமீறிய செயல்!


ஈக்வடாரில் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்தி கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். நீண்ட நாளாக தலைமறைவில் இருந்த கோய்புரோ இன்ஸ்டாகிராமில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக பதிவிட்டிருந்த சில நிமிடங்களில் அவர் மீது கொடூர தாக்குதல் நடைபெற்றுள்ளது.


இன்ஸ்டா பதிவால் சிக்கிய அழகி


இந்த சம்பவம் அந்த உணவகத்தின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கோய்புரோ அமர்ந்திருந்த இருக்கைக்கு திடீரென வந்த அந்த தாக்குதல்காரர்கள், அவரை சுட்டுக்கொன்றுள்ளனர். கோய்புரோ அருகில் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அவரை கொலை செய்த உடன் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து புகைப்படங்களை எடுத்தபோது கோய்புரோ ரத்த வெள்ளத்தில் மிதந்ததை பார்க்க முடிந்தது. 


நீண்ட நாள்களாக தலைமறைவாக இருந்து வந்த கோய்புராவின் இருப்பிடத்தை அவரின் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் கொலையாளிகள் அறிந்திருக்க வாய்ப்புள்ளது என போலீசார் கருதுகின்றனர். கோய்புரா அந்த உணவகத்தில் மதிய உணவாக ஆக்டோபஸ் கறியை சாப்பிட்டு வருவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவை தொடர்ந்து கொஞ்ச நேரத்திலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளது. 


கொலையின் பின்னணி என்ன?


இந்த கொலை குறித்த பின்னணி என்ன என்பது இன்னும் தெரியவரவில்லை. இருப்பினும் இவர் கொலையை தொடர்ந்து ஊகங்கள் ஏராளமாக உள்ளன. உயிரிழந்த கோய்புரா போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலின் தலைவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த கும்பலின் தலைவர் சில நாள்களுக்கு முன் கலவரம் ஒன்றில் உயிரிழந்த நிலையில், அதை தொடர்ந்து இவர் தலைமறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. 


மேலும் அவள் குற்றங்களின் விசாரணையில் நீதித்துறை அதிகாரிகளிடம் சிக்கியதால் இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கோய்புரா உறவு வைத்திருந்த அந்த கும்பலின் தலைவருடைய விதவை மனைவி இவரை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | 25 கன்னிப் பெண்கள்... இந்த காலத்திலும் அந்தப்புரம் - வடகொரிய அதிபரின் சேட்டை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ