25 கன்னிப் பெண்கள்... இந்த காலத்திலும் அந்தப்புரம் - வடகொரிய அதிபரின் சேட்டை!

Kim Jong Pleasure Squad: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் வருடந்தோரும் 25 கன்னிப் பெண்களை தேர்வு செய்து தனது இன்பத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : May 3, 2024, 04:28 PM IST
  • இதுகுறித்து வடகொரியாவில் இருந்து தப்பிய பெண்மணி கூறி உள்ளார்.
  • அழகிய பெண்களை தேர்வு செய்து அந்த குழுவில் சேர்ப்பார்கள்.
  • அந்த குழுவின் பெயரே இன்பம் அளிக்கும் குழு தான்.
25 கன்னிப் பெண்கள்... இந்த காலத்திலும் அந்தப்புரம் - வடகொரிய அதிபரின் சேட்டை! title=

Kim Jong Pleasure Squad: கொரியா என்றாலே பலருக்கும் பல விஷயங்கள் ஞாபகம் வரும். இளைஞர்களுக்கு கொரியன் சீரிஸ், கொரியன் BTS பேண்ட் போன்ற விஷயங்கள் ஞாபகம் வரும். இன்னும் சில சினிமா பித்துப்பிடித்தவர்களுக்கு இயக்குநர் கிம் கி டுக் போன்றவர்களை ஞாபகம் அனைவரும். ஆனால், வட கொரியா என குறிப்பிட்டுச் சொன்னாலே அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் தான் பலருக்கும் ஞாபகம் வருவார்கள். 

சர்வாதிகாரியாக அறியப்படும் கிம் ஜாங் உன் குறித்து பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் செய்திகள் அடிக்கடி வருவது வழக்கமாகும். அந்த வகையில், வடகொரியாவில் இருந்து வெளியேறிய ஒரு பெண்மணி கிம் ஜாங் குறித்து தற்போது பகீரங்கமான தகவலை வெளியிட்டுள்ளார்.  வெளியிட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த யூ-ட்பூரும், எழுத்தாளருமான யோன்மி பார்க் என்பவர் ஊடகம் ஒன்றிடம் பேசியபோது,'வட கொரிய அதிபரான கிம் ஜாங் தனது பாலியல் இச்சைக்காக வருடந்தோரும் 25 கன்னிப் பெண்ணைகளை தேர்வு செய்து 'இன்பம் அளிக்கும் குழு' என்ற பெயரில் வைத்திருக்கிறார்' என்றார். 

அப்பா காலத்தில் இருந்தே...

மேலும் அந்த பெண்மணி கூறுகையில், அந்த குழுவில் சேர்க்க ஒவ்வொரு பெண்ணையும் அவர்களின் தோற்றம் மற்றும் அரசியல் சார்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு தேர்வு செய்கிறார்கள் என கூறியுள்ளார். யோன்மி பார்க் அவரது 13வது வயதில் 2007ஆம் ஆண்டு வட கொரியாவில் இருந்து சீனாவுக்கு இடம்பெயர்ந்துள்ளார். அவரை இரண்டு முறை அந்த குழுவில் தேர்வு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், பார்க்கின் குடும்ப அஸ்தஸ்து காரணமாக அவரை தேர்வு செய்யவில்லை என்றார். இந்த போக்கு, கிம் ஜாங்கின் தந்தையான முன்னாள் அதிபர் கிம் ஜாங் II ஆட்சிகாலத்திலேயே இருந்துள்ளது, அதாவது 70s காலகட்டத்தில்...

மேலும் படிக்க | வளர்ப்பு மகனுடன் அரசியல்வாதி உடலுறவு...? கட்டிலில் கையும் களவுமாக பிடித்த கணவன்!

"அவர்கள் ஒரு அழகான பெண்ணை கண்டுவிட்டால், முதலில் அவர்கள் அந்த பெண்ணின் குடும்ப பின்னணியை விசாரிப்பார்கள், அரசியல் நிலைப்பாட்டையும் கேட்பார்கள். வட கொரியாவில் தப்பித்த குடும்பத்தினரின் பெண்கள் என்றால் விட்டுவிடுவார்கள், அல்லது தென் கொரியா அல்லது வேறு நாடுகளில் உறவினர்கள் இருந்தாலும் விட்டுவிடுவார்கள்" என்றார். 

மூன்று பிரிவுகள்

மேலும் அந்த குழுவிலேயே மூன்று உட்பிரிவுகள் உள்ளன. ஒரு குழுவினர் மசாஜ் செய்வதற்கும், மற்றொரு பிரிவு பாடுவதற்கும், ஆடுவதற்கும் என கூறப்படுகிறது. மூன்றாவது பிரிவுதான் 'பாலியல் நடவடிக்கைகளுக்கான பிரிவு' என்கிறார் பார்க். "அவர்கள் அதிபருடனும், மற்ற ஆண்களுடனும் நெருக்கமாக இருப்பதே அவர்களின் கடமையாகும். இதற்காக பிரத்யேகமாக அவர்களுக்கு பயிற்சியளிக்கப்படும். 

அந்த குழுவில் கூடுதல் வசீகரமாக இருக்கும் பெண்கள் கிம் ஜாங்கிற்கு மட்டும் என ஒதுக்கப்பட்டிருப்பார்கள். மற்ற வசீகரம் குறைவானவர்களாக கருதப்படுவோர் அடுத்தக்கட்ட தலைவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என ஒதுக்கப்படுவார்கள் எனவும் பார்க் குற்றஞ்சாட்டினார்.  

மேலும் படிக்க | சீனாவில் கனமழையால் சாலை இடிந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலி.. 30 பேர் காயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News