உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் ஆன எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்க தான் தயார் என அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிவிட்டர் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இடம் பெற மறுத்த சில நாட்களுக்குப் பிறகு,   எலான் மஸ்க் ட்விட்டரை சுமார் 43 பில்லியன் டாலர்களுக்கு வாங்க முன்வந்துள்ளார். எலான் மஸ்க் நிர்வாக குழுவில் இடம் பெற மறுத்ததற்கு பின் பல காரணங்கள் சொல்லபப்ட்டு வந்த நிலையில் தற்போது ட்விட்டரை மொத்தமாகக் கைப்பற்ற முடிவு செய்து, அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை $54.20  என்ற விலை வாங்க முன்வந்துள்ளார். டிவிட்டர் நிறுவனத்தின்  9.2 சதவீத பங்குகளை வாங்கிய நிலையில், தற்போது 43 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் மொத்த நிறுவனத்தையும் வாங்க முன் வருவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். 


"உலகளவில் சுதந்திரமான பேச்சுக்கான தளமாக ட்விட்டர் இருக்கும் என நம்பிக்கையின் அடிப்படையில் தான் அதில் முதலீடு செய்தேன். ஆனால், அதன் தற்போதைய வடிவத்தில் பேச்சு சுதந்திரத்தை முழுமையாக வழங்கும் நோக்கம் நிறைவேறாது என்பதை நான் இப்போது உணர்கிறேன். ட்விட்டரை ஒரு தனியார் நிறுவனமாக மாற்ற வேண்டும்" என்று ட்விட்டர் தலைவர் பிரட் டெய்லருக்கு எழுதிய கடிதத்தில் மஸ்க் கூறினார்.


மேலும் படிக்க | Twitter vs Income: விளம்பரம் கொடுப்பவர்களின் சக்தியை ஏன் முன்னிலைப்படுத்த வேண்டும்: எலோன் மஸ்க்


"எனது சலுகை மிக சிறந்த சலுகை என்பதோடு, இது இறுதி சலுகையாகும், அது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், பங்குதாரராக இருக்கும் எனது நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று மஸ்க் கூறினார். 


இந்த வார தொடக்கத்தில், மஸ்க் தனது பதவிக்காலம் தொடங்கவுள்ள நிலையில், ட்விட்டர் குழுவில் சேரும் திட்டத்தை கைவிட்டதாகக் கூறினார்.  நிர்வாக குழுவில் இருந்தால்,  நிறுவனத்தை கையகப்படுத்த அது தடையாக இருக்கும் என முன்னதாக கூறப்பட்டது. 


டிவிட்டர் தளத்தில், எலான் மஸ்கிற்கு  சுமார் 80 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். டிவிட்டரில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் எலான் மஸ்க் தனது டிவீட்கள் மூலம் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார். 


மேலும் படிக்க | புதிய சோஷியல் மீடியா தளத்தை தொடங்குகிறாரா எலான் மஸ்க்? அவரே கூறிய பதில்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR