எலோன் மஸ்க் வசம் செல்லும் ட்விட்டர்; மஸ்க் பதிவு செய்த முதல் ட்வீட்
எலான் மஸ்க், ட்விட்டரை வாங்க ட்விட்டர் நிர்வாகக்குழு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், எலான் மஸ்க் பேச்சு சுதந்திரம் குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க், வாங்குவது உறுதியாகியுள்ளது. மஸ்க் கடந்த சில காலமாக ட்விட்டரை வாங்க முயற்சித்து வந்த நிலையில், தற்போது ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கிய நிலையில், தற்போது 44 பில்லியன் டாலருக்கு நிறுவனத்தையும் வாங்க ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக்குழு ஒப்புதல் தெரிவித்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
'ட்விட்டர் ஒரு டிஜிட்டல் டவுன் சதுக்கம்'
இந்நிலையில், எலோன் மஸ்க் பேச்சு சுதந்திரம் பற்றி ஒரு ட்வீட் செய்துள்ளார், அதில் அவர் பேச்சு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பேச்சு சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை என்று பதிவு செய்த எலான் மஸ்க், ட்விட்டர் ஒரு டிஜிட்டல் டவுன் சதுக்கம், மனிதநேயத்தின் பார்வையில் முக்கியமான எதிர்கால பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எலான் மஸ்க், ட்விட்டரை வாங்க ட்விட்டர் நிர்வாகக்குழு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், எலான் மஸ்க் பேச்சு சுதந்திரம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி, தனது அடுத்த உத்தி என்ன என்பதையும், இந்த சமூக ஊடக தளம் எவ்வாறு மேம்படுத்தப்படும் என்பதையும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | Elon Musk - Twitter: டிவிட்டரை மொத்தமாக வாங்க தயாராகும் எலான் மஸ்க்
ட்விட்டர் அம்சங்களை மேம்படுத்த நடவடிக்கை
ட்விட்டரின் புதிய முதலாளியான மஸ்க், புதிய அம்சங்கள், ஓப்பன் சோர்ஸ் அல்காரிதம்கள் மூலம் ட்விட்டரை முன்பை விட சிறந்த தயாரிப்பாக மாற்ற விரும்புவதாக கூறியுள்ளார். டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி மேலும் கூறுகையில், 'ட்விட்டர் மிகவும் சக்தி வாய்ந்தது. நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து குவியும் வாழ்த்துகள்
எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதற்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. முன்னாள் தென் கரோலினா கவர்னர் நிக்கி ஹேலி தனது ட்வீட்டில், 'டவுனில் உள்ள புதிய ஷெரிப் எலோன் மஸ்கிற்கு வாழ்த்துகள். அனைவருக்கும் கருத்துச் சுதந்திரத்தை மீட்டெடுப்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். எலோன் மஸ்க் இப்போது எங்கள் ட்விட்டரின் உரிமையாளர் என்று ஒரு பயனர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இதேபோல், எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு சஸ்பெண்ட் செய்யப்பட்ட கணக்குகள் மீட்கப்படும் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | புதிய சோஷியல் மீடியா தளத்தை தொடங்குகிறாரா எலான் மஸ்க்? அவரே கூறிய பதில்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR